Monday, September 26, 2011

உள்ளாட்சித் தேர்தல் – ஒரு முழுமையான விவரம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை தனித்தனியே தேர்தல் களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 17-ந் தேதி முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.

தமிழக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக அக்டோபர் 17-ந் தேதி 9 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், அதற்கு உள்பட்ட ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது.


இதில் ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் நீங்கலாக ஏனைய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் பற்றி அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் வருகிற 27-ந்தேதி சென்னையில் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

2

43 
5

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza