Friday, September 30, 2011

அணுஆயுதத்தை சுமந்து இலக்கை தாக்கும் அக்னி II ஏவுகணை சோதனை வெற்றி!

agni-2
புவனேஸ்வர்:அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு  இலக்கை தாக்கவல்ல அக்னி II ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒரிசா மாநிலம் வீலர் தீவில் உள்ள சோதனை வளாகத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு இலக்கை நோக்கி செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டது.  சுமார் 2,000 கிலோமீட்டர் தூரத்துக்குச் சென்று குறிப்பிட்ட இலக்கை அக்னி II ஏவுகணை கச்சிதமாக தாக்கி அழித்தது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தினர்.

ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து அங்கிருந்த ராணுவ அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த அக்னி II ஏவுகணையின் நீளம் 20 மீட்டர், சுற்றளவு ஒரு மீட்டரும், 17 டன் எடையும் கொண்டது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்டதாகும்.

அக்னி II, இந்திய ஆயுத அமைப்பில் முக்கிய ஏவுகணையாக விளங்குகிறது. இந்த ஏவுகணையை  ரயில் மற்றும் சாலை மூலம் கொண்டு செல்லலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்படவிருந்த பரிசோதனை  கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்று இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza