பாக்தாத்:ஈராக்கின் புனித நகரமான கர்பலாவில் அரசாங்க கட்டிடத்துக்கு அருகில் தொடர் குண்டு வெடித்ததால் 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் வாங்குவதற்கு வந்த காவலர்களும் பொதுமக்களும் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
முதலில் ஒரு குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ராணுவமும் மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். அவ்வேளையில் அவர்களை குறிவைத்து மீண்டும் 3 குண்டுகள் வெடித்துச் சிதறியது.
அதனால் அப்பகுதி முழுவதும் மனித உடல்களும், அவற்றின் பாகங்களும் சிதறி கிடந்து கோரமாக காட்சியளித்ததாகவும், கட்டிடத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்கள் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் தீமலை போல் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் பத்திரிகையாளர்களிடம் கூறினர்.
கடந்த வியாழனன்று இங்கு நடந்த ஒரு குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த வருடங்கள் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தும் அரசு கட்டிடங்களுக்கு அருகிலும், ராணுவ மற்றும் காவலர்களை குறி வைத்து நடத்தப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment