Tuesday, September 27, 2011

நோபல் பரிசு வென்ற வங்காரி மத்தாய் மரணம்

nobel-laureate-wangari-maathai
நைரோபி:அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வங்காரி மத்தாய் புற்றுநோயால் மரணமடைந்தார்.

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனளின்றி இன்று காலமனார். அவருக்கு வயது 71.

சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அரும் பணியாற்றியதற்காக, அவருக்கு 2004-ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு வழங்கபப்பட்டது.

பெண்களை ஒருங்கிணைத்து, காடுகளை அழிப்பதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்த ‘பசுமைத் தாய்’  என்பது கவனத்துக்குரியது. மேலும், அநீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் அதிகாரிகளுடன் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்.

கென்ய அரசின் சார்பில் பேசிய அந்நாட்டின் துணை அதிபர் கேலொன்சான் முஸ்யோகா, ஆப்பிரிக்காவின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவரான வங்காரி மத்தாய் நினைவாக மரங்களை நடுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

நோபல் விருது உரையின்போது, “மரங்களை நடும்போது, அமைதி மற்றும் நம்பிக்கைக்கான விதைகளை நாம் நடுகிறோம்.” என்று வங்காரி மத்தாய், சீரழிந்து வரும் சமூக மற்றும் சுற்றுச்சூழலில், ஏழ்மையிலும், துன்பத்திலும் இருக்கும் பெண்களுக்கு மரங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறியவர்.

கென்ய அரசின் காடுகளை அழிக்கும் திட்டத்துக்கு எதிராக 1977-ஆம் ஆண்டு அந்நாட்டின் கிரீன் பெல்ட் இயக்கத்தைத் தொடங்கி, அவர் 4 கோடியே 70 லட்சம் மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza