Monday, September 26, 2011

தனித் தெலுங்கானா போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

imagesCAXL7XIX
ஹைதராபாத்:தனித் தெலுங்கானா கோரி அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழு திங்கட் கிழமையன்று ரயில் மறியல் போராட்டம், காங்கிரஸ் அரசின் பிரதிநிதிகளின் வீடுகளை முற்றுகையிடுதல் மற்றும் ஹைதராபாத் முழுவதும் முழு அடைப்பு உட்பட பல போராட்டங்களை தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தற்போது நடைபெற்று வரும் “சமூகத்தின் அனித்து தளத்திலிருந்தும் போராட்டம்” என்ற கட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவின் அமைப்பாளர் எம்.கொடந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘ஆந்திர பிரதேச மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் தனித் தெலுங்கான கோரி பேரணி நடத்த உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் வருகின்ற செப்டம்பர் 28-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் ஆந்திர மாநில முதலைமைச்சர் என்.கிரண் குமார் ரெட்டி சூழ்ச்சியின் ஒரு பகுதியாக தெலுங்கானா பகுதியில் மின்வெட்டிற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள எம்.கொடந்தரம் தனித் தெலுங்கான ஆதரவாளர்களை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாநில அரசின் பிரதிநிதிகளின் வீடுகளை முற்றுகையிடுமாறு கேட்டுள்ளார். மேலும் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ஹைதராபாத் முழுவதும் பந்த் நடத்தவும் அக்டோபர் 1-ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வருகின்ற அக்டோபர் 3  ஆம் தேதி தொடங்க இருக்கும்  “பதுகம்மா” திருவிழாவை தனித் தெலுங்கானா பிரச்சராத்திற்கு பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளார். மேலும் சில தனியார் பேருந்து நிறுவனங்கள் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநில தலைநகருக்கு பேருந்துகளை இயக்குவதாகவும் அவர்கள் பேருந்து சேவைகளை நிறுத்தாவிட்டால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழு ஹஜ் யாத்திரை செய்யும் முஸ்லிம்களிடம் தனித் தெலுங்கானாவிற்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza