நியூயார்க்:அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கருத்துகணிப்பு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக ஒபாமாவின் செல்வாக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவலாக சரிந்த நிலையில் உள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் ஒபாமாவின் செல்வாக்கு மேலும் சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க மக்களீல் 43 சதவீதம் பேர் ஒபாமா மீண்டும் அதிபராக ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், கடந்த 2008-ம் ஆண்டைவிட இந்த முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகியுள்ளது. கடந்த தேர்தலில் அவர் அதிபராக வந்திருந்தால் அமெரிக்கா மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment