Saturday, September 24, 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளும் தனித்துப் போட்டி

imagesCA6F0VCA
சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பல கட்சிகளும் போட்டியிடும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. கூட்டணியை மதிக்காமால் தனித்துப் போட்டியிடுவதாக திமுக அறிவித்தது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என்று அது கூறியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமையில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதில் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு பற்றிய முக்கிய தீர்மானம் ஓன்று நிறைவேற்றபட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவது என்றும்,கூட்டணியில் இருந்து கொண்டு இருக்கும் நிலையில் கூட்டணியை மதிக்காமால் தனித்துப் போட்டியிடுவதாக திமுக அறிவித்தது அவர்களின் ஏகாதிபத்திய மனப்போக்கை காட்டுகிறது என்றும் அதை விடுதலை சிறுத்தைகள் கடுமையாக கண்டிக்கிறது என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பாமக, மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும். ஒரே கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza