தருமபுரி:வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்தது, கிராம மக்களிடம் அத்துமீறியது உள்ளிட்ட வழக்குகளில் இந்திய வனத்துறை அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட அனைவருக்கும் நீதிபதி நேற்று மாலை தண்டனையை அறிவித்தார்.
19 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் வழங்கப்படும் தீர்ப்பு என்பதால், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்குகளின் குற்றவாளிகள் அனைவரும் 1992-ல் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையில் பொறுப்பு வகித்தவர்களாவர்.
அதன்படி, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உள்பட 12 பேருக்கு 17 ஆண்டுகளை சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
150 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
70 பேருக்கு ஒராண்டு சிறை மற்றும் தலா ரூ.1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.
முக்கியக் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட இன்னொரு ஐ.எப்.எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கெனவே இறந்துவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர் என்பது கவனத்துக்குரியது.
குற்றவாளிகளிடம் இருந்து திரட்டப்பட்ட அபராதத் தொகை, பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு அளிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பலரும் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment