Thursday, September 29, 2011

பெண்கள் போர்க்களத்தில் – ஆஸி. அரசு அனுமதி

imagesCA7XNIIF
சிட்னி:ஆஸ்திரேலியப் படையில் உள்ள பெண் ராணுவத்தினர் போர்களத்துக்குச் செல்வது உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பணியாற்ற அனுமதிப்பது என ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல்,கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தான் இதுவரை பெண்களை போர்முனைக்கு செல்லும் பணிகளில் சேர்த்து வந்தன.

இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளில் பீரங்கிகளை இயக்குவது உள்ளிட்ட 93 சதவீதப் பணிகளில் பெண்கள் பங்கு பெற ஆஸ்திரேலிய அரசு வழிவகுத்துள்ளது.

தற்போது, ஆஸ்திரேலிய ராணுவத்தில் 59 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். இதில் 1500 பேர் ஆஃப்கானில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். அனைவரும் சமம் என்ற கருத்தின் அடிப்படையில், போர்முனையில் பெண்களையும் அமர்த்துவது என ஆஸ்திரேலிய முடிவு செய்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza