புதுடெல்லி:ஆஜம்கர் நகரைச் சேர்ந்த மஃபூஸ் அஹமது என்ற வாலிபர் ஒரு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் காணாமல் போனார். தீவிரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்பு குற்றமற்றவர் என்று கடந்த சனிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மஃபூஸ் அஹமது என்ற வாலிபர் ஆஜம்கர் நகரில் சிபிலி நேஷனல் கல்லுரியில் பணி புரிந்து வந்தார். ஆடிடிங் கணக்கு ஆவணங்களை பெற்று வருவதற்காக கல்லூரி நிர்வாகம் அவரை வாரணாசிக்கு அனுப்பியது.
வாரணாசிக்கு சென்ற அஹமது தனக்கு கொடுக்கப்பட்ட அந்த பணியை முடித்து விட்டு அன்று மாலை அங்கிருந்து கிழம்பி ஆஜம்கர் வந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறார். ஆனால் சொன்னபடி அவர் ஆஜம்கருக்கு திரும்ப வில்லை. கல்லூரி நிர்வாகமும் அவரது குடும்பத்தார்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் அஹமதை தொடர்பு கொள்ள முடியவில்லை.தொலைபேசி மூலமாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் கொண்டனர்.
ராஷ்டிரிய உலமா கவுன்சில் உடனடியாக தலையிட்டு அஹமதை தேடுவதற்கான பணிகளில் ஈடுபட்டனர். வாரணாசியில் செயல்படும் தீவிரவாத எதிர்ப்புப் படை போலிஸாரிடம் விசாரித்தனர். இதில் அவர்களால் அஹமது கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அஹமதை மீட்பதற்காக சிபிலி கல்லூரி மாணவர்கள் மற்றும் ராஷ்டிரிய உலமா கவுன்சிலும் இணைந்து சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடுமையான நெருக்கடியை கொடுத்தற்கு பின்புதான் காவல்துறையினர் அஹமதை விடுதலை செய்தனர். ஆஜம்கர் நகரிலிருந்து அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பொய் வழக்குப் போட்டு கைது செய்யப்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment