நாகர்கோவில்:முக்கடல்களைப் போலவே முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என மூன்று சமூகமும் நல்லிணக்கத்தோடு கைக்குலுக்கி வாழ்ந்த மண் குமரி மாவட்டம். 1982-ஆம் ஆண்டு நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம் இம்மூன்று மதத்தினர் இடையே நிலவிய நல்லிணக்கத்திற்கு விழுந்த முதல் அடியாக மாறியது.
1993-ஆம் ஆண்டு மணலிக்குழிவிளை என்ற பகுதியில் கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டுத்தலம் நள்ளிரவில் ஹிந்துத்துவா பாசிச சக்திகளால் இடித்து தள்ளப்பட்டது. இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது. அடுத்து வந்த காலக்கட்டங்களில் வட நாட்டிலிருந்து தமிழகத்திற்கு ஏற்றுமதிச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வன்முறையைத் தூண்ட பாசிஸ்டுகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறியது. இந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்தபவர்கள் ஹிந்துமுன்னணி, பா.ஜ.க சங்க்பரிவார பாசிச கும்பலாகும்.