Thursday, August 23, 2012

நியூயார்க் போலீஸ்: 6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்து என்ன கிடைத்தது?


நியூயார்க் ஏரியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்களை ஆறு வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட கிடைக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது நியூயார்க் போலீஸ் NYPD (New York Police Department)
நியூயார்க் கோர்ட்டில் நடைபெறும் சிவில் உரிமை வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த NYPD துணைத் தலைவர் தாமஸ் கலாடி, கோர்ட்டில் இதை ஒப்புக்கொண்டார்.
முஸ்லிம் மக்களை உளவு பார்ப்பதற்காக டெமோகிராஃபிக்ஸ் யூனிட் என்ற பிரிவு ஒன்றை அமைத்து, அதில் பல உளவாளிகளை பணியில் அமர்த்தியிருந்தது நியூயார்க் போலீஸ். காவல்துறையின் உளவு பார்க்கும் பிரிவுகளில், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதும், இந்த பிரிவுக்குதான்.
கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஃபுல் ஃபோர்ஸில் இயங்கிவரும் பிரிவு இது.


முஸ்லிம்கள் வசிக்கும், ஷாப்பிங் செய்யும் இடங்களில் துவங்கி, வழிபாட்டு ஸ்தலங்கள், இஸ்லாமிய மாணவர் அமைப்புகள் என்று சகல இடங்களிலும் தமது ஆட்களை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.டெமோகிராஃபிக்ஸ் யூனிட்டின் உளவு புரோகிராம், சி.ஐ.ஏ.-வின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. நியூயார்க் ஏரியாவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் தமது உளவாளிகளை ஊடுருவ விட்டுள்ளது இந்த யூனிட்.
கடந்த வருடம் கொண்டுவந்த புதிய நடைமுறை ஒன்றின்படி, முஸ்லிம் பெயரில் இருந்து அமெரிக்க பெயருக்கு மாற்றிக் கொள்ளும் அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.
அதேபோல, வேறு மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களும், முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தனர்.
இவ்வளவு துல்லியமாக ஊடுருவியும், இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார், NYPD துணைத் தலைவர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza