Tuesday, August 14, 2012

படிப்பினை!

வாசகர் பக்கம்
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஏற்ப்பட்ட சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது. அதன் காரணத்தால் அமெரிக்க தூதரகம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவேண்டும் என்று அவசர உத்தரவு.
விஷயம் என்னவென்று பார்த்தால் அமெரிக்க போலிஸ் ஒருவன் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கு சொந்தமான குருத்வராவுக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டான் இதில் 6 சீக்கியர்கள் பலியானார்கள் பலர் படுகாயம் ஆனார்கள். இது அமெரிக்க ராணுவம் செய்த படுபாதகச் செயல் இதை இந்தியன் மட்டும் அல்ல மனிதன் என்கின்ற முறையில் நாமும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் உள்ள இன்னொரு விஷயம் என்னவென்றால் உலக ரவுடி என்று தன்னை நினைத்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு தனது தூதரகம் அனைத்திலும் அவர்களது தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் இறக்கியது.

நாம் கேட்பது என்னவென்றால் ஆறு பேருக்காக தன்னுடைய தன்மானத்தை கூட இழந்து மன்னிப்பு கேட்டதன் பின்னணி என்ன? இதற்க்கு முன்னாள் இதுபோன்ற செயல்களை இவரகள் செய்தது இல்லையா? ஏனெனில் தனக்கு எல்லாவகையிலும் ஒத்து ஊதக்கூடிய, வளந்துவரும் நாடான இந்தியாவில் நட்பை அது இழக்க விரும்பவில்லை அதிலும் இந்திய பிரதமரின் சாதியான சீக்கிய சாதியை சார்ந்த ஒருவர் கொலப்பட்டால் உடனே தனது தலைப்பாவை கூட அவிழ்க்க மன்மோகன் தயங்கமாட்டார் என்பது ஒபாமாவுக்கு தெரியும். அப்படி ஒருவேளை ஜாநோதயம் வந்து அவர் தனது தலைப்பாவை அவிழ்த்துவிட்டால் கூடா நட்பு கேடாய் அமைந்த கதையில். தனக்கு எல்லாவகையிலும் ஆதரவாக, போட சொன்ன இடத்தில் எல்லாம் ஏன் எதற்கு என்றுகூட கேட்காமல் கையெழுத்து போட்ட மன்மோகன் திடீர் பல்டி அடித்து விட்டால் தங்களது நிலை என்ன ஆகும் என்பதை அறிந்துதான் மன்மோகன் தலைப்பாவை அவிழ்க்க கூடாது அதற்காக தங்களது நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறந்தாலும் பிரச்சினை அல்ல என்ற நிலையில்தான் அமெரிக்கா இந்த உத்தரவைப் பிறப்பித்து உள்ளது .
ஆனால் உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய நாடுகள் இருந்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நேரடியாகவே களமிறங்கி ஈராக், ஆஃப்கானிஸ்தான், பஃலஸ்தீன் என பல நாடுகளில் முஸ்லிம்களை மட்டும் பல லட்சக்கணக்கில் கொன்று குவித்தார்களே.
ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதரிகளை அமெரிக்க ராணுவம் கூட்டு வன்புணர்வு செய்தார்களே, ஈரானிய விஞ்ஞானிகள் குறிவைத்து கொல்லப்பட்டார்களே, அப்பாவி முஸ்லிம்கள் கொடூர குவாண்டனாமோ சிறையில் வைத்து கபளீகரம் செய்தார்களே, நிர்வாணமாக நிற்கவைத்து பாலியல் தொந்தரவு செய்தார்களே, கை கால்கலை கட்டிவைத்து வெறிநாய்களை விட்டு கடிக்கவிட்டார்களே, அப்போதெல்லாம் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்காதது ஏன்?
இதே அமெரிக்காவில் பல தடவை மசூதிகள் தீக்கரையாகி வருகிறதே இதனால் அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்ததா?
இஸ்லாமிய நாடுகளின் மூலம் அமெரிக்கா பலன் அடைய வில்லையா? அதிகம் உள்ளது ஆனாலும் ஏன் செய்யவில்லை. காரணம் இந்த முஸ்லிம் மன்னர்களிடம் இறைவன் கூறுவதுபோல உலக மோகம் அதிகரித்து விட்டது மரணத்தைப் பற்றி அசசம் குறைந்து விட்டது!
இந்த மனித வல்லரசுகளுக்கு பயப்பட ஆரம்பித்து விட்டனர் அதனால்தான் தங்களை மூர்க்கமாக எதிர்த்த யாசர் அரபாத்தைக் கூட அவரது கடைசிக் காலத்தில் எவ்வாறு கவிழ்த்தார்கள் என்பதை உலகம் கண்டது.
இளம் பெண்களையும், உலக ஆசைகளையும் அவருக்கு கொடுத்ததன் விளைவு எதிர்க்கவேண்டிய எதிரிகளை விட்டு விட்டு தங்களது இஸ்லாமிய சகோதரர்களையே சிறையில் தள்ளினார்கள்.
இன்னும் முஸ்லிம்களின் ஒற்றுமை ஓய்ந்துவிடவில்லை வரலாற்றில் நமக்கு அதிகம் படிப்பினைகள் உள்ளது அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் அவர்களது கொடிக்கம்பம் நிரந்தரமாக அரைக்கம்பத்தில் பறக்கும் நிலை உருவாகும் அதற்கு முஸ்லிம் சமூதாயம் தங்களிடம் உள்ள பயம் மற்றும் சில சில பிரச்சினைகளை களைய வேண்டும்.
கீழக்கரையான்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza