Sunday, August 26, 2012

அஸ்ஸாம்:இனக்கலவரங்களில் பலியானவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள்!

Muslims and Tribes were most killed assam ethnic riots
புதுடெல்லி:அஸ்ஸாம் நிகழ்ந்த இனக் கலவரங்களில் பழங்குடியினரும், முஸ்லிம்களும் அதிகமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். 1993-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த ஐந்து இனக்கலவரங்களில் 303 பழங்குடியினரும், 197 முஸ்லிம்களும், 95 போடோக்களும் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் அரசின் புள்ளிவிபரங்களை அவுட் லுக் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
தற்பொழுது அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ள கலவரத்தில் இதுவரை 56 முஸ்லிம்களும், 17 போடோக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து இனக்கலவரங்களில் மூன்று முஸ்லிம்களையும், இரண்டு பழங்குடியினரையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

கலவரம் நிகழ்ந்த ஆண்டுகளும், கொலைச் செய்யப்பட்டவர்களும் குறித்த விபரம்:
இம்முறை நடந்த கலவரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஆனால், சமூக அடிப்படையிலான புள்ளிவிபரங்களை முதல்வர் தருண் கோகோய் வெளியிடவில்லை. இனக் கலவரங்களில் இதர பிரிவினர் அதிகமாக கொலைச் செய்யப்பட காரணம், போடோக்களிடம் ஏ.கே-47 போன்ற நவீன ஆயுதங்களும், அரசு மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளின் ஆதரவுமாகும்.
ஆயுதங்களை ஒப்படைப்போம் என ஒப்பந்தம் செய்து கொண்ட போதிலும் இதுவரை போடோக்கள் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்கவில்லை. இனக்கலவரம் துவங்கிய பொழுதே உள்துறை அமைச்சகம் நிராயுபாணிகளாக்கும் முயற்சியை துவக்குமாறு அஸ்ஸாம் அரசுக்கு உத்தரவு பிறப்பித்த போதும் அரசு அதனை அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza