Monday, August 13, 2012

அசாம் அகதிகளுக்கு உதவிடுவீர்! பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் வேண்டுகோள்!


அசாம் அகதிகள் முகாமில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவிக்கரம் நீட்டுமாறு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக போடோ இனத்தினர் நடத்திய கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயன்றளவு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

149 அகதிகள் முகாமில் அவர்களின் அடிப்படை தேவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 149 முகாம்களில் நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சிராங்கில் 25 முகாம்கள், சபாரில் 10 முகாம்கள், பிலாசிபாராவில் 55 முகாம்கள், போங்கைகாவ்னில் 7 முகாம்கள், கவுரிபூரில் 25 முகாம்கள், கோக்ரஜாரில் 27 முகாம்கள் என அவர்களின் தேவை என்ன என்பது கணக்கிடப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். ஷரீப், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உஸ்மான் பெய்க் மற்றும் ஓ.எம்.ஏ. ஸலாம் ஆகியோர் வெவ்வேறு தருணங்களில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தாருடன் சேர்ந்து அகதிகள் முகாம்களை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மற்றொரு தேசிய செயற்குழு உறுப்பினரான மவ்லானா காலித் ரஷாதி அங்கேயே முகாமிட்டு அவசர கால நிவாரண பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றார்.

150 வாலண்டியர்கள் ஒரு குழுவாக இருந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குழந்தைகளுக்கான உணவு, மருந்துகள், உடைகள், தார்பாய் ஷீட்டுகள், கொசுவலைகள், வாளி, மக், மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை அகதிகளின் தேவைக்கேற்ப பாப்புலர் ஃப்ரண்ட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிதியைக்  கொண்டு செயல்படுத்தி வருகின்றனர்.

நடைபெற்று வரும் அசாம் அகதிகளின் நிவாரண பணிகளுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் ஈகைப் பெருநாள் அன்று (ஈத்கா மைதானங்களில்) நிவாரண நிதி திரட்ட உள்ளனர்.

ஈகைப் பெருநாளின் சந்தோசமான தருணத்தில் நாட்டின் ஒரு பகுதியில் அனைத்தையும் இழந்து நிற்கும் நமது சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆதரவுக் கரங்களை நீட்டிட வேண்டும் என முஸ்லிம் உம்மத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza