Thursday, August 16, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் தலைமயகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி

ஆகஸ்ட் 15,2012 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தலைமையகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.



காலை 10 மணியளவில் ஒற்றுமை கீதத்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் ஷாஹித் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின் மாநில துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது .அதன்பின் சிறப்புரையாற்றிய மாநில துணை தலைவர்  பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக அனைவருக்கும் சுதந்திர தின  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அதை தொடர்ந்து  பேசிய அவர், ஊழல் எதிர்ப்பு போராளிகள் தொடங்கிஅனைவரும் வன்முறையை தங்களின் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். பழங்குடியினர் ,ஆதிவாசிகள், தலித்கள், முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு எதிராக நடைபெற்று வரும் பயங்கரவாதம், அவர்களின் உரிமை போராட்டங்கள் தீவிரவாதமாக சித்தரிக்கப்படுதல் போன்றவை சுதந்திரத்தை கேள்விக்குரியதாகவும் ,கேலிக்குரியதாகவும் ஆக்கி வருகின்றது.

இதுபோன்ற நிலை மாற்றப்பட்டு உண்மையான சுதந்திரத்தை அனைவரும் அனுபவிக்கும் சூழல் உருவாக்கப்படவேண்டும் ,அதற்க்கான உறுதியை இந்த சுதந்திர தினத்தில் நாம் அனைவரும் எடுக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza