Saturday, August 11, 2012

சர்வதேச குத்ஸ் தினத்தை நினைவு கூற பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு!

Al-Quds Day
சென்னை: ‘அல் குத்ஸ் தினத்தில்’ போராடி கொண்டிருக்கும் ஃபஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிக்க பாப்புலர் ஃப்ரண்டின் தமிழகத் தலைவர் இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இவர்கள் புரிந்து வரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காதவர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்டுவதில்லை.

இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும் பைத்துல் முகத்தஸை பாதுகாப்பதற்காகவும் ஃபலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையே போராட்டமாகவும் அவர்களின் பிரதேசங்கள் போராட்டக்களமாகவும் மாறியுள்ளன. புனித பூமியை பாதுகாப்பதற்காக இதுவரை இலட்சக்கணக்கான உயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அனைவரும் களத்தில் உள்ளனர். ஃபலஸ்தீனியர்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை “அல் குத்ஸ் தினமாக” அனுஷ்டிக்க வேண்டும் என இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானித்தனர்.
ஃபலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான சிறப்புரைகள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அன்றைய தினத்தில் நடத்தப்படுகின்றன. அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகளில் கூட நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் நம்முடைய பகுதிகளில் இந்த தினம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. ஃபலஸ்தீன போராட்டமும் பைத்துல் முகத்தஸின் மீட்பும் வெறும் ஃபலஸ்தீன பிரச்சனை என்றோ அல்லது அரபுக்களின் பிரச்சனை என்ற அளவில் சுருக்குவதற்கான சூழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஃபலஸ்தீன பூமி நபிமார்கள் சுற்றி திரிந்த ஒரு பிரதேசம் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் முதல் கிப்லா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய இடம், நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று பள்ளிகளுள் இதுவும் ஒன்று. எனவே ஜெருஸலம் பூமியும் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் சொந்தமானது. அதன் மீட்பில் அனைவரும் பங்காற்ற வேண்டும்.
இந்த வருட ‘அல் குத்ஸ் தினத்தில்’ போராடி கொண்டிருக்கும் ஃபஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் ஃபலஸ்தீன போராட்ட வரலாறு, பைத்துல் முகத்தஸ் வரலாறு, இஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் நம்முடைய பங்களிப்பு குறித்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். புனித பூமியின் மீட்பில் நம்முடைய இச்சிறிய பங்கை நாம் ஆற்றலாம். சர்வதேச குத்ஸ் தினத்தை நம்முடைய பகுதிகளிலும் அனுஷ்டிப்போம். ரமலானின் கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 17 ஜூம்ஆ பயான்களிலும் இரவுத் தொழுகைக்கு பிந்தைய பயான்களிலும் பைத்துல் முகத்தஸை நினைவு கூர்வதுடன் அதனை மீட்கும் போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்” என பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர் இஸ்மாயில்  வேண்டுகோள் விடுத்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza