Sunday, August 19, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பெருநாள் தின விளையாட்டு போட்டி


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சமூக மற்றும் நலப்பணிகளை இந்தியா முழுவதும் செய்துவருகின்றது. இன்றைய நவீன உலகில் உடல் ஆரோக்கியம் பற்றிய கவலை நம் மக்களிடத்தில் குறைவு அல்லது இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதி வேக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிகழ்வை மாற்ற ஒவ்வொரு வருடமும் "ஆரோக்கியமான மக்கள் ஆரோக்கியமான தேசம்" என்ற செயல்திட்டத்தின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் உடல் பயிற்சி, யோகா, கராத்தே போன்றவற்றை ஊக்கபடுத்தியும், நடைமுறைபடுத்தியும் வருகின்றது.

அதன் ஓர் அம்சம் தான் பெருநாள் தினங்களில் விளையாட்டு போட்டிகள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தின் பெருநாள் தினங்களின் போது வாள் வீச்சு, அம்பு எறியும் போட்டி, மலயுத்தம் ஆகியவை நடத்தப்பட்டு பலத்தை திரட்டி கொள்ளுவதில் மக்கள் பங்களிப்பு செய்துவந்தனர்.


"பலஹீனமான் முஃமீனைவிட பலமுள்ள முஃமீன் தான் அல்லாஹ்விற்கு மிகவும் உவப்பானவன்!" என்ற நபிகளாரின் கூற்றுப்படி பலமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்று வருகிறது. இவ்வாறான போட்டிகளை நடத்துவதின் மூலமும் அதில் பங்குபெறுவதின் மூலம் நபிகளாரி பொன்மொழிகளை பின்பற்றுபவர்களாகவும், அதே சமயம் இறைவன் விரும்பக்கூடிய பலமுள்ள சமூகமாக மாறுவதும் என இரு அழகிய நன்மைகளை பெற முடியும்.
இதன் அடிப்படையில் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட்டின் சார்பாக நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து போட்டியும், நமதூர் இளைஞர்களுக்கு கைப்பந்து போட்டியும் நடைபெறுகினறது.


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza