புதுடெல்லி:இந்தியாவில் ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச அஜண்டாவை நடைமுறைப்படுத்துவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) தேசிய செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தியை கூட ரகசிய புலனாய்வு பிரிவு, தனது ரகசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
உபயோகித்துள்ளது என்பதற்கான ஆதாரம் தான் அவரது முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கை.முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புண்டு என்று அறிக்கை வெளியிட்ட ராகுல் காந்தி நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தேசிய செயற்குழு தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.