Saturday, October 19, 2013

காணாமல் போன சென்னை ஹஜ் பயணி இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் ஊழியரால் கண்டுபிடிப்பு!


iff

ஜித்தா: சென்னையில் இருந்து புனித ஹஜ் யாத்திரை சென்று, இறந்ததாகக் கருதப்பட்ட ஒரு புனிதப் பயணி, மக்காவில் உள்ள மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் என்பவர் தன் மனைவி பதருந் நிசாவுடன் சேர்ந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். அவர்கள் யாத்திரையின் முதல் நாளன்று பிரிந்து விட்டனர். நான்கு நாள்களாகத் தேடியும் பரக்கத்துல்லாஹ்வைக் காணாததால் அவர் இறந்து விட்டதாக அவரது யாத்திரைக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் கருதினர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பரக்கத்துல்லாஹ்வின் உறவினர்கள் தியாகப் பெருநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டு, இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், மக்காவில் உள்ள மன்னர் அப்துல்லாஹ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் பரக்கத்துல்லாஹ் உயிருடன் இருப்பதை இந்தியா ஃப்ரேட்ர்னிட்டி ஃபாரம் (IFF) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஊழியர் அஷ்ரஃப் கண்டுபிடித்தார்.
இதனைத் தொடர்ந்து சவூதி அரசின் அவசர ஊழியர்கள் பரக்கத்துல்லாஹ் அவர்களுடைய பூரணமான ஹஜ் கனவை நிறைவேற்ற அவரை மருத்துவமனையில் இருந்து அரஃபா மைதானத்திற்கு ஆம்புலன்ஸில் அழைத்து வந்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza