புதுடெல்லி: தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம் வருமாறு:
சமீப காலமாக அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதம் என்ற பெயரில் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. தவறுதலாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி அப்பாவி முஸ்லிம்களைத் தவறுதலாகக் கைது செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 39 சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அவற்றில் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு தீவிரவாத வழக்குகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
-Info : thoothuonline.com
0 கருத்துரைகள்:
Post a Comment