Sunday, October 6, 2013

முஸஃபர்நகர்: பாப்புலர் ஃப்ரண்டின் முதல் கட்ட நிவாரணப் பணி நிறைவு!


M_Id_421480_unease_

புதுடெல்லி: முஸஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணியின் முதல் கட்டம் நிறைவுற்றதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம். அப்துல் ஸலாம் தெரிவித்துள்ளார்.

கிராமங்கள் ரீதியாக சர்வே, சட்ட உதவி ஆகியவற்றிற்காக பாப்புலர் ஃப்ரண்ட் மூன்று குழுக்களை நியமித்திருந்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் 38 கிராமங்களில் தற்காலிகமாக அபயம் தேடியது சர்வேயில் தெரிய வந்தது. 


உணவுப் பொருட்கள், போர்வை, பாத்திரங்கள், பால் பொடி ஆகியன விநியோகிக்கப்பட்டன. மீதமுள்ள கிராமங்களில் வரும் நாட்களில் நிவாரண உதவிப் பொருட்கள் அடங்கிய கிட்டுகள் வழங்கப்படும். நிவாரணப் பொருட்களை வழங்குவதோடு சட்ட உதவி தேவைப்படுவோரைக் கண்டறிந்து வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், சட்டம் பயிலும் மாணவர்கள் உள்பட 22 பேர் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உதவியின் மூலம் இதுவரை பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒ.எம். அப்துல் ஸலாம் தெரிவித்தார்.

-  thoothuonline.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza