Wednesday, October 30, 2013

காஸாவில் ராணுவ பயிற்சி மையத்தை நோக்கி இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்!



காஸாவில் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியுள்ளன. வடக்கு காஸாவில் ஹமாஸின் ராணுவ பயிற்சி மையத்தை குறி வைத்து ட்ரோன் விமானத்திலிருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்தன.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் யாருக்கும் காயமுற்றதாக தகவல் இல்லை. ராணுவ மையத்திற்கு அருகே ஏவுகணைகள் விழுந்தன. இவ்வேளையில் யாரும் அங்கிருக்கவில்லை.

காஸாவில் இருந்து அஷ்கலோனை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையும் காஸா மீது இஸ்ரேல் அராஜக தாக்குதலை நடத்தியிருந்தது.
எகிப்து எல்லையை மூடிவிட்டதால் அத்தியாவசியப் பொருட்களை பெற ஃபலஸ்தீன் மக்கள் நம்பியிருக்கும் சுரங்கங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களால் ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்று ஃபலஸ்தீன் வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
-Newindia.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza