இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..
கடந்த வாரம் 28 ஆம்தேதி விருத்தாச்சலத்தில் திராவிடர் கழக சார்பில மாணவர் அணி மாநாடும் அதையொட்டி கருத்தரங்கமும் மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியும் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ளவந்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் மீது காவிக்கொடியுடன் திரண்டு வந்த ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தினர் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. கடும் கண்டனத்திற்குரியது.
காவல்துறை அதிகாரிகள் ஆரம்பம் முதலே ஒருபக்க சார்புடனும் எதிர்ப்புணர்வுடனும் திராவிடர் கழகத்தினரோடு நடந்துள்ளனர். இதுவே தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகளுக்கு தைரியத்தை வரவழைத்துள்ளதாக தெரிகிறது.
நடந்த சம்பவங்களுக்கு காரணமான ஆதிக்க சக்திகள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு தமிழகத்தில் சமூக, அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
0 கருத்துரைகள்:
Post a Comment