புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் ஆதரவாக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன், 2008ஆம் ஆண்டே பரிந்துரை செய்திருந்தார். இதை தற்போது நிறைவேற்ற அவர் முனைப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இஸ்லாமிய சட்டம் (ஷரீஅத்) அடிப்படையில் செயல்படும் இந்த வங்கிகளில் பெறப்படும் கடன் தொகைக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக் கூடியது.
உலகின் பல்வேறு நாடுகள் இஸ்லாமிய வங்கிகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-thoothuonline.com
0 கருத்துரைகள்:
Post a Comment