மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உ.பி., முஸாஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதாக கூறி நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ராகுலின் கருத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நேற்று புதுடெல்லி துக்ளக் ரோட்டில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராகுல் காந்தியின் பேச்சு முஸ்லிம் மக்களின் ஒருமைப்பாட்டை சந்தேகிக்கும் விதமாக உள்ளது. பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் மாறுபட்டதல்ல என்பதற்கான ஆதாரமே ராகுல் காந்தியின் அறிக்கை எனவே ராகுல்காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று கோஷமிட்ட அவர்கள் ராகுல் காந்தியின் உருவ பொம்மையையும் எரித்தனர். இதனால் டெல்லி துக்ளக் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
-newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment