முஸாஃபர்நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
'நிவாரண பணிகளுக்கும், மறுவாழ்வுக்குமான சூழல்களை உருவாக்கவேண்டும். அகதிகளுக்கு சொந்த வீடுகளுக்கு திரும்பவும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சூழலை ஏற்படுத்தவேண்டும்.’ என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வலியுறுத்தியுள்ளது.
முஸாஃபர் நகர் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பலரை காணவில்லை. லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக புலன் பெயர்ந்துள்ளனர். இக்கலவரத்தில் பெண்கள் கூட்டு பாலியல்
வன்கொடுமைக்கு ஆளானதாக செய்திகள் வெளியாகின. இதுவரை ஐந்து கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகளை போலீஸ் பதிவுச் செய்துள்ளது. இன்னும் அதிகமான பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அச்சத்தால் அவர்கள் போலீஸை அணுகவில்லை என்றும் கலவரம் நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்ற தன்னார்வ தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக முன்வரவும், நீதி கிடைப்பதற்குமான சூழலை உருவாக்கவேண்டும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வலியுறுத்தியுள்ளது.
Source : New india.tv
0 கருத்துரைகள்:
Post a Comment