Wednesday, October 2, 2013

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சென்னையில் மனித சங்கிலி போராட்டம்


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (02.10.2013)சென்னையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.உயர்நீதிமன்றம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.

கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா,ரத்தினம்வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீத்தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி தமது உரையில்

பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் பாலியல் கொடுமைகொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதை குறிப்பிட்ட அவர்,இதற்கு அடிப்படையாக விளங்கும் மதுவை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மதுவினால் வரும் வருமானத்தை காட்டிலும்அதனால் ஏற்படக்கூடிய சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த அதிக தொகையினை செலவழிக்கப்படுவதையும்உயிரிழப்புகள் ஏற்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ நடத்தி வரும் தொடர் போராட்டங்களையும்பிரச்சாரங்களையும் விரிவாக எடுத்துரைத்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்தும்வரை எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடும் என உறுதிபட தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள்உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.




0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza