Wednesday, October 2, 2013

கிரிமினல்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் பயம்! மோடி சிக்கவைக்கப்படுவதாக ஜெட்லி பிரதமருக்கு கடிதம்!



கிரிமினல் அரசியல்வாதிகள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் போலி என்கவுன்டர் வழக்கில் சிபிஐ மூலம் குஜராத் முதலமைச்சரும், பாஜக பிரதமர் வேட்பாளரிமான நரேந்திர மோடி குறிவைக்கப்படுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், போலி என்கவுன்டர் வழக்கில் மோடியை சேர்க்கும் நோக்கத்தில் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், போலி என்கவுன்டர் தொடர்பாக குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எவ்வித அரசு தரப்பு சாட்சியமும் இல்லாமல் சிபிஐ கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தவறான வாக்குமூலத்தின் அடிப்படையில் அமித் ஷாவை சிபிஐ கைது செய்துள்ளதாகவும், இஷ்ரத் ஜஹான் வழக்கில் மற்றவர்களை சேர்ப்பதற்காக சிபிஐ, சிலருடன் பேரம் நடத்தி உள்ளதாகவும் ஜெட்லி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக உச்சநீதிமன்ற தீர்ப்பானது கிரிமினல்கள் தேர்தலில் கூட போட்டியிடக் கூடாது என்பதை அறிவுறுத்துகிறது.

Info : Newindia.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza