Monday, October 21, 2013

இஸ்ரேல் சிறைகளில் கொடிய சித்திரவதைகளை அனுபவிக்கும் ஃபலஸ்தீன் குழந்தைகள்: யுனிசெஃப் அறிக்கை!



இஸ்ரேல் சிறைகளளில் ஃபலஸ்தீன சிறுவர்கள் கொடிய சித்திரவதைகளை அனுபவிப்பதாக ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃபின் அறிக்கை கூறுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொடுமைகள் குறித்து ஏழு மாதங்கள் முன்பு யுனிசெஃப் முதல் கட்ட அறிக்கையை அளித்திருந்தது. இதன் பின்னரும் அதே நிலை தொடருவதாக புதிய அறிக்கை கூறுகிறது.

மேற்கு கரையில் இஸ்ரேல் நடத்திய 20 கொடூரங்கள் குறித்து புதிய அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. 219 ஃபலஸ்தீன் குழந்தைகளை இஸ்ரேல் ஒவ்வொரு மாதமும் காவலில் எடுத்துள்ளது.
கடந்த வருடம் ஒவ்வொரு மாதமும் 196 ஃபலஸ்தீன் குழந்தைகள் பிடிக்கப்பட்டனர். முந்தைய ஆண்டை விட  இவ்வாண்டு பிடிக்கப்பட்ட  ஃபலஸ்தீன் குழந்தைகளின் எண்ணிக்கை 12 சதவீதம்
அதிகமாகும். இஸ்ரேல் அரசின் ஆதரவுடன் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது.
17 வயதுக்கு கீழான 7 ஆயிரம் ஃபலஸ்தீன் குழந்தைகளை கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் ராணுவம் கைது செய்து சித்திரவதைச் செய்ததாக யுனிசெஃபின் 22 பக்க அறிக்கை கூறுகிறது.
-New india.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza