முஸாஃபர் நகர் கலவரம் குறித்த மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 கோடியே 84 லட்சம் ஒதுக்கி உ.பி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்படி அசையும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எனவும் அசையா சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கு மேல் எனவும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 800 குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பி செல்ல பயந்தபடி பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளன. அரசு அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் நாங்கள் திரும்பி அந்த இடத்திற்கு போக மாட்டோம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று நிலம், வீடு போன்றவற்றை வாங்கி, தங்களின் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக உ.பி. பொதுப்பணி துறை மந்திரி ஷிவ்பால் யாதவ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று கலவரத்தால் இடம் பெயர்ந்த ஆயிரத்து 800 குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி. அரசு அறிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment