Sunday, January 30, 2011

ஆசிய கோப்பை கால் பந்து போட்டியில் ஜப்பான் வெற்றி

தோஹா, ஜன.29: கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜப்பான் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருûமையை ஜப்பான் பெற்றது. இதற்கு முன்னதாக 1992, 2000, 2004 ஆகிய ஆண்டுகளில் ஜப்பான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ஜப்பானின் மாற்று ஆட்டக்காரர் ததானரி லீ, கோல் அடித்து ஜப்பானுக்கு வெற்றித் தேடித்தந்தார்.

அதிமுகவுடன்! மனித நேய மக்கள் கட்சி கூட்டணி!

சென்னை ஜன.30:'தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.' என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார். கூட்டத்தில், தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது; ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்துவது; வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகம் கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது.

Saturday, January 29, 2011

"சங்கி தீவிரவாதம்" : தீவிரவாதிகளுக்கு குஜராத்தில் அடைக்கலம்.

புதுதில்லி, ஜன.28- குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் அடைக்கலம் தருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் செயல்பாட்டை அவர் "சங்கி தீவிரவாதம்" என்றும் வர்ணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில், மனித உரிமை அமைப்புகள் தொடர்பாக இன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், இஸ்லாமிய இளைஞர்கள் தவறுதலாக தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார். "ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும். சுவாமி அசிமானந்த் போன்றவர்களுக்கு குஜராத் அடைக்கலம் வழங்குகிறது." என்றும் திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.

பொய் வழக்குகளில் சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுதலைச் செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம்

புதுடெல்லி,ஜன.:பயங்கரவாதத்தின் பெயரால் பொய் வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பெரிய அளவிலான பிரச்சார நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது.

வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மார்ச்-26 வரை இப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்த எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது.

நிரபராதிகளை விடுதலைச் செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ நேரடியாகவோ அல்லது பொதுநலன் வழக்கையோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.

அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெளிவான பிறகும் நிரபராதிகள் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு கூறியது.

சிறுபான்மையினர், தலித்துகள், இதர ஒடுக்கப்பட்ட ஜாதியினர் ஆகியோரின் எழுச்சி என்ற செயல் திட்டமும் பிரச்சார நிகழ்ச்சிகளில் எடுத்துக் காட்டப்படும்.

பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், சுவர் விளம்பரம், வாகன பிரச்சார ஊர்வலம், தெருமுனைக் கூட்டங்கள், மக்களின் புகார்களை பெறுதல் ஆகியன இப்பிரச்சார நிகழ்ச்சிகளில் இடம்பெறும். இத்துடன் ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளும் பேசப்படும். மேலும் இந்நிகழ்ச்சியின்போது தேசிய தலைமையில் ஒரு குழு பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். மார்ச் 27-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் இப்பிரச்சார நிகழ்ச்சி நிறைவுறும்.

மார்ச் மாதம் 11-ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது. புதிய செயற்குழுவும், நிர்வாகிகளும் மார்ச் 26-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தேசிய தலைவர் இ.அபூபக்கர் தலைமை வகித்தார். செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகானும், பொதுச்செயலாளர் எ.ஸயீதும் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். ஊழல், விலைவாசி உயர்வு, பயங்கரவாதம் ஆகிய விஷயங்களில் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூரில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுத்த அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான பா.ஜ.க குடியரசு தினத்தில் கஷ்மீரில் தேசிய கொடியை ஏற்ற முயற்சித்தது பிரச்சார நாடகம் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு கருத்துத் தெரிவித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அரசின் வேலைவாய்ப்பு முகாமில் அலைக்கழிக்கபட்ட பட்டதாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்கள்

கீழக்கரையில் நடந்த வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்புக்கு மாறாக நடந்ததால், ஆயிரக்கணக்கான பட்டதாரி பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அரசு சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கும் சிறப்பு முகாமுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை பதிவு நடந்தது. 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்தனர். இதன் முகாம் கீழக்கரையில் நேற்று நடந்தது. காலை 5 மணி முதல் பெண்களும், இளைஞர்களும் குவிந்தனர். சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்களுக்கும், சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் பெண்களுக்கும் நடந்தது. 58 தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டன. எதிர்பார்ப்புடன் வந்த பட்டதாரிகள் அங்கு தெரிவிக்கப்பட்ட சம்பளத்தை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.இதையறிந்த ஏராளமான பெண்கள் முகாமில் பங்கேற்காமலே பெற்றோருடன் வீடு திரும்பினர். முகாமில் கலந்து கொண்ட பட்டதாரிகளில் இந்திராணி (எமனேஸ்வரம்)கூறியதாவது : இந்த முகாமில் எவ்வித பலனும் இல்லை. 4000 ரூபாய் சம்பளத்திற்கு டெய்லரிங் நிறுவனத்திற்கு அழைக்கின்றனர். இரண்டு நாள் அலைந்து பெயர் பதிவு செய்தும் பயனில்லை. இதை நடத்தியதால் அரசுக்குதான் கெட்டபெயர் .இது ஒரு தேர்தல் ஸ்டண்ட். ரிஸ்வான் (பரமக்குடி): முகாமுக்காக பதிவு செய்யும் போது கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற்றமடைந்து நிற்கிறோம்.பட்டதாரிகளுக்கு இங்கு வேலை இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்தனர். இரண்டு மாடி ஏறி இறங்கியது தான் மிச்சம். எவ்வித பலனும் இல்லை. மாற்றுத்திறனாளிகளையும் தேவையில்லாமல் அலைக்கழிப்பு செய்துள்ளனர், என்றார். மிகக் குறைவானவர்களே வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கோமகன் : 18 ஆயிரத்து 730 பேர் பங்கேற்றனர். பெண்கள் மட்டும் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 746 பேர் வந்திருந்தனர். 4665 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 506 பேர் காத்திருப்போர்பட்டியலில் உள்ளனர். 10, பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ தகுதியுடையவர்களை எடுக்கும் கம்பெனிகளே அதிகம் வந்திருந்தன. என்றார்.
உதயசூரியன் சின்னத்துடன் தி.மு.க.,எம்.பி.,உதயசூரியன் சின்னம் வைக்கப்பட்ட வேன் சகிதமாக முகாம் நடக்கும் இடத்திற்கு வந்த ரித்தீஷ்குமார் எம்.பி., வேனில் நின்றபடி பேசியது தேர்தல் பிரசாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது போல் இருந்தது.இதை "தினமலர்' நிருபர் படம் எடுப்பதை அறிந்ததும், வேனின் மேல் இருந்த உதய சூரியன் சின்னம் பேப்பர் கொண்டு மறைக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்களில் சிறப்பு பஸ் என்ற பெயரில் ஆறு ரூபாய்க்கு பதிலாக பத்து ரூபாய் வசூலித்தனர்.

செய்தி : தினமலர்

Friday, January 28, 2011

SDPI - புதுவலசை கிளை கூட்டம்


பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை என்ற முழக்கத்தோடு மாற்று அரசியலை நோக்கி பயனிக்கும் SDPI-யின் புதுவலசை கிளை கூட்டம் இன்று (27-01-2011) நடைபெற்றது. SDPI-யின் புதுவலசை கிளை பொருலாளர் ஜனாப். அப்துல் ரஜாக் அவர்கள் தலைமை வகித்தார், கிளை தலைவர் சகோதரர். அபுரார் அஹமது முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக இராம்நாட் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபீக்குர் ரஹ்மான்(சித்தார்கோட்டை), பரமக்குடி செயலாளர். கலீலுர் ரஹ்மான், பரமக்குடி தலைவர் சகோதரர். சௌந்தர் ராஜன், பனைக்குளம் கிளை தலைவர் ரியாஸ்தீன், நகர்மன்ற உறுப்பினர் மீரான் ஒனி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நமது பகுதியின் நிலைமை பற்றி கலந்துரையாடப்பட்டது. இறுதியாக சித்தார்கோட்டை முதல் ஆற்றங்கரை வரையுள்ள சாலை பழுதடைந்துள்ளது. அதனை சீர் செய்ய அரசாங்கத்தை அனுகி மனுகொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் புதுவலசை கிளை முக்கிய உறுப்பினர்கள் அஸ்மத், ஹாஜா, ஷாம் நைனா, பஷீர் அஹமது, முபாரக் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக புதுவலசை கிளை செயலாளர் அஸ்வர் ரஹ்மான் நன்றியுறை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

பசுக்கள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடுக்க வேண்டும் - விஹிப!

இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்றமே ஆலோசனை கூறியிருந்தும் இதுவரை மத்திய அரசு அதற்கு ஆவன செய்யாதது ஏன்?" என விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் அகில உலக தலைவர் அஷோக் சிங்கால் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் கோசாலைகளில் வளர்க்கப்படும் பசுக்களின் சாணத்தில் இருந்து விபூதி தயாரிக்கப்படுகிறது. இந்த விபூதி விநியோக அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிசத் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் அகில உலக தலைவர் அஷோக்சிங்கால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விபூதி விநியோகத்தைத் தொடங்கி வைத்து பேசும் போது, "நெற்றியில் பூசப்படும் விபூதியில் ஆன்மிக தன்மை இருக்கிறது. இதுபற்றி கீதையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் கோசாலைகளில் உள்ள பசுக்களின் சாணத்தில் இருந்து மூலிகை விபூதி தயாரிக்கப்படுகிறது. இதை வட மாநிலங்களில் தயாரித்து வழங்குவதற்கு ஆவன செய்வோம்.

ஏராளமான மாடுகள் இறைச்சிக்காக நாடு முழுவதும் வெட்டப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் அதிகளவில் இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட பசுக்களைக் கொல்வதைத் தடுக்க சட்டம் கொண்டு வரலாம் என்று ஆலோசனை கூறியுள்ளது. ஆனால் ஏனோ மத்திய அரசு தடை சட்டத்தைக் கொண்டு வர மறுக்கிறது.

கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தச் சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தால் அங்கு காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள் அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். கவர்னர்கள் தடைக்கல்லாக இருக்கிறார்கள்" என்று பேசினார்

இஸ்ரோ மீதான தடையை நீக்கியது அமெரிக்கா


வாஷிங்டன்,ஜன.27:இஸ்ரோ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களுக்கு கடந்த 1998ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது அமெரிக்கா.

1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதையடுத்து இஸ்ரோ உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது. அன்று முதல் இந்த தடை நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது 13 ஆண்டு கால தடையை நீக்கியுள்ளது அமெரிக்கா.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது அவருக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி தற்போது இந்தியாவின் இஸ்ரோ மீதான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் கேரி லாக் கூறுகையில், இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளிலும் இன்றைய தினம் ஒரு மைல் கல்லாகும். இஸ்ரோ மற்றும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான தடைகள் அகலுகின்றன. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை என்றார்.

இஸ்ரோ தவிர, பாரத் டைனமிக்ஸ் லிமிட்டெட், ஆயுத ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகம், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆய்வகம், ஏவுகணை ஆய்வு மற்றும் வளர்ச்சி வளாகம், திட நிலை இயற்பியல் ஆய்வகம், திரவ எரிபொருள் என்ஜின் சிஸ்டம் மையம், திட எரிபொருள் விண்வெளி பூஸ்டர் நிலையம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆகியவற்றின் மீதான தடைகளும் அகன்றுள்ளன.

தடை அமலில் இருந்து வந்ததால், மேற்கண்ட நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் தொடர்பு வைத்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இந்திய நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வந்தன. லைசன்ஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் கெடுபிடியுடன் அமல்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அவை தேவையில்லை.

Thursday, January 27, 2011

கடைசி நாள்...


குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர், நாளை (ஜனவரி 28) மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். துணை கலெக்டர், வணிக வரித்துறையில் உதவிக் கமிஷனர், மாவட்ட பதிவாளர், டி.எஸ்.பி., உள்ளிட்ட 257 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 முதல் நிலைத் தேர்வை, வரும் ஜூன் 5 ல் மாநிலம் முழுவதும், பல்வேறு நகரங்களில் டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இதற்கு விண்ணப்பம் செய்ய நாளை கடைசி நாள். நாளை மாலை 5:45 மணிக்குள், விண்ணப்பம் செய்ய வேண்டும். பட்டதாரிகள் அனைவரும் இத்தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

சிறப்பாக பணியாற்றிய 64 முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதக்கம்.


புதுடெல்லி,ஜன.27:சிறப்பான சேவைபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்படும். இந்த ஆண்டு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 52 பேராவர், ராணுவத்தில் பதக்கம் பெற்றவர்கள் 12 பேரும் மொத்தம் 64 பேர் பதக்கம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தலைவர் பதக்கம் 4 பிரிவுகளில் வழங்கப்படும்.தமிழகத்தில் குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற உயர் அதிகாரிகள் விபரம்.: எஸ்.எம்.முகமது இக்பால்(காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை). எஸ்.நிஜாமுதீன் (காவல்துறைக் கண்காணிப்பாளர்-திருச்சி மாவட்டம்) .ப்.எம்.ஹுசேன் (காவல்துறைக் கண்காணிப்பாளர் - தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை). எஸ்.அப்துல்கனி (கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-வது பட்டாலியன், உளுந்தூர்பேட்டை).கே.காதர்கான் (தலைமைக் காவல் அதிகாரி, சிறப்பு அதிரடிப்படை- ஈரோடு). ராணுவத்தில் வீரதீரச் செயல் மற்றும் சிறப்பான சேவை புரிந்தோர் 440 பேருக்கு வழங்கப்பட்ட குடியரசு தலைவர் பதக்கத்தில் 12 முஸ்லிம்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ சேவைக்காக வழங்கப்படும் 3-வது பெரிய பதக்கமான ஸவ்ரிய சக்ரா பதக்கம் பெற்றவர்களில் முஹம்மது ஷஃபியும் ஒருவராவார். 

எழுச்சியுடன் நிறைவுற்ற கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு


சென்னை,ஜன.25:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு, சென்னையில் நீதியரசர் பசீர் அஹமது சயீத் கல்லூரியில் கடந்த 23 ம்தேதி எழுச்சியுடன் நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஏ.சாஹூல் ஹமீது காலை 9.30 மணிக்கு நீல வண்ணத்தில் சிகப்பு நட்சத்திரம் மின்னும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொடியை ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகிக்க, கூடியிருந்த மாணவர்கள் 'சமூக மாற்றத்திற்கான கோஷங்கள்' எழுப்பி விண்ணதிரச் செய்தனர்.

கேம்பஸ் எக்ஸ்போ - 2011
இதனைத் தொடர்ந்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத் தலைவர் அ.முஹம்மது அன்வர் 'கேம்பஸ் எக்ஸ்போ - 2011' கண்காட்சியை துவக்கி வைத்தார்.

'அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி' வரை பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், சமூக அக்கறையற்ற மாணவர்கள் ஏற்படுத்திய வெற்றிடம், 'ஊழல்வாதிகளையும், ஆதிக்க சக்திகளிடம் அடி பணிபவர்களையும்' ஆட்சியில் அமர்த்துவது குறித்தும், அதன் விளைவு இந்தியாவை பின்னோக்கி அழைத்துச் செல்வது குறித்தும், இவற்றிக்கான மாற்றங்கள் புரட்சியின் மூலமே ஏற்படும் என்பது குறித்தும் காட்சியாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

மேலும், ராகிங், ஈவ்டீசிங் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து 'ஈவண்ட் டெமோ' நடித்துக் காட்டப்பட்டது.

கருத்தரங்கம்
'சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் காலை 10.30 மணிக்கு நீதியரசர் பசீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி அரங்கில் துவங்கியது. நிகழ்ச்சிக்கு தேசிய பொதுச்செயலாளர் அனிஸுஜ் ஜமான் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றினார். மாநிலத் தலைவர் சாஹூல் ஹமீது அறிமுக உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் ஜே.எஸ்.அலி அசாருதீன், கடந்த ஆண்டின் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை சமர்பித்தார்.'சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பிலான கருப்பொருள் (Theme) மாநில துணைத்தலைவர் அப்துல் ரஹ்மானால் சமர்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகள், முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துரை வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்
மதியம் 2.30 மணிக்கு மாணவர்களின் தனித் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகம், பாட்டு மற்றும் கவிதை ஆகியவற்றை மாணவர்கள் படித்தும், நடித்தும் காட்டினர்.

நிறைவுப் பொதுக்கூட்டம்
மாநாட்டின் நிறைவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத்தலைவர் முகம்மது ஷாஃபி வரவேற்புரையாற்றினார். முன்னாள் மாநிலத் தலைவர் சாஹூல் ஹமீது தலைமை தாங்கினார். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வழக்கறிஞர் முகம்மது யூசுப் துவக்கி வைத்து உரையாற்றினார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (தீயணைப்பு, மீட்பு) திரு.R. நட்ராஜ் IPS., அவர்களும் மனித நேயம் ஐ.ஏ.எஸ் அகாடமியின் தலைவர் சைதை ச.துரைசாமி அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் A.S.இஸ்மாயில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நூல் வெளியீடு
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் "நாமும் சாதிக்கலாம்" என்ற மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை டி.ஜி.பி திரு.R.நட்ராஜ் I.P.S. அவர்கள் வெளியிட, அதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை சைதை ச.துரைசாமி வெளியிட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில ஆலோசனை குழுத் தலைவர் K.S.M.இப்ராஹிம் B.Com., அவர்கள் பெற்றுக்கொண்டார்.

கட்டுரைப் போட்டி
மாநாட்டை முன்னிட்டு 'சமூக மாற்றத்தில் மாணவர் பங்கு' , 'லஞ்சம் ஊழலில் என் தேசம்' ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டி ஒரு மாதத்திற்கு முன்பே நடத்தப்பட்டது. அதில் தமிழக முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர்களை முன்னாள் மாநில துணைத்தலைவர் முகம்மது அன்வர் மாநாட்டு மேடையில்அறிவித்தார். இவர்களுக்கான பரிசுத்தொகை வெற்றிபெற்ற பள்ளி கல்லூரிகளில் ஒரு பரிசளிப்பு விழா நடத்தி அங்கு வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

வெற்றி பெற்றவர்கள்
கட்டுரைத் தலைப்பு:' சமூக மாற்றத்தில் மாணவர் பங்கு'

முதல் பரிசு : எஸ்.அன்பழகன், 2ம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம்
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி, திருச்சி.
இரண்டாம் பரிசு: ஏ.ஜோஷி புஷ்பா, 9ம் வகுப்பு
புனித இக்னேஷியஸ் மேல்நிலைப்பள்ளி,
பாளையங்கோட்டை, நெல்லை.
மூன்றாம் பரிசு : எம். சுகன்யா, 1ம் ஆண்டு எம்.ஏ. தமிழ்.
லேடி டோக் கல்லூரி, மதுரை.

கட்டுரைத் தலைப்பு: 'லஞ்சம் ஊழலில் என் தேசம்'

முதல் பரிசு : ஆர்.ராஜலட்சுமி, 2ம் ஆண்டு பி. எல்.
அரசு சட்டக் கல்லூரி, நெல்லை.
இரண்டாம் பரிசு: எம்.டி. வினோத் குமார், 11ம் வகுப்பு
தியாகராசர் நன்முறை மேல்நிலைப் பள்ளி, மதுரை.
மூன்றாம் பரிசு : யூ.ஜெனோஃபர், 2ம் ஆண்டு பி.சி.ஏ.
ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி.

மேலும் கலந்துக் கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். என அறிவிக்கப்பட்டது.

நேரடி ஒளிபரப்பு
மதியம் 2.30 மணி முதல் மாநாடு www.campusfrontofindia.org என்ற இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழகத்திலும், வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் மக்களும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கண்டுகளித்தனர்.

இறுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மாநில துணைத் தலைவர் முகம்மது அன்வர் முடிவுரை வழங்கினார். மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் R.ராஜா முகம்மது அவர்கள் வாசித்தார். தஞ்சை மாவட்டத் தலைவர் V.M. பக்கீர் முகைதீன் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

source:பத்திரிக்கைச் செய்தி

நவீன உலகின் ஹிட்லர்!!! அவர்தான் நரேந்திர மோடி!!


குஜராத் சோகங்கள் ஒரு பார்வை: நவீன உலகின் ஹிட்லராக தன்னை அடையாளபடுத்தி கொண்ட குஜராத் முதல்வர் மோடியின் கட்டளையின் பெயரில் குஜராத் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரால் கலவரம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து, பெண்களைக் கற்பழித்து, முஸ்லிம் பெண்களின் கருப்பையைக் கிழித்து பட்சிலம் பிஞ்சு குழந்தைகளை வாள் முனையில் சொருகிக் கொன்று ரத்த வெறியாட்டம் ஆடியது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம்.

குஜராத் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் எப்படி திட்டமிட்டு நடத்தினார்கள் என்பதை அவர்கள் வாயாலே வெட்கம் இல்லாமல் தெகல்கா வீடியோ முன் அப்பட்டமாக நின்று எப்படித் திட்டமிட்டோம், எப்படிக் கொன்றோம் என்று குற்றவுணர்ச்சியே இல்லாமல் விவரித்தார்கள். இப்படி கொலை செய்து கலவரங்கள் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் கொலைகாரர்களை பற்றிய செய்திகள் வெளியிட இந்த பார்பன ஹிந்துவா பத்திரிக்கைகளுக்கு மனம் வரவில்லை. இவர்கள் செய்த கலவரங்களை, இந்தியா முழுவதும் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் பற்றி வாய்திறக்காமல் தொடர் மவுனவிரதம் இருந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லை அத்வானி, மோடி, பால்தாக்ரே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத், போன்றவர்களை வரலாற்று நாயகர்களாக சித்தரிக்க தலைப்படுகிறார்கள்.

இந்த கலவரங்களை நடத்த நீண்டகாலம் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளனர். குஜராத்தில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக அங்கே வேலை செய்திருக்கிறது. கலவரத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே குஜராத்தைப் பற்றிய ஒரு முழுமையான சர்வேயை வி.எச்.பி எடுத்துள்ளது. அதில் முஸ்லிம்கள் மக்கள் தொகை, முஸ்லிம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருக்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராய் அணி திரட்டியிருக்கிறார்கள்.

இந்த கலவரம் ஒன்றும் சட்டென்று நிகழ்ந்ததல்ல பல்லாண்டுகளாகத் திட்டமிட்டு படிப்படியாக ஊடுருவி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களையே பாசிசமயமாக்கியிருக்கிறார்கள். இத்தனை விமரிசையாக அம்பலப்பட்ட பின்னும் மோடியின் தேர்தல் வெற்றி சாத்தியமாகி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இது தான். நாஜிக் கட்சியினர் எப்படி ஜெர்மானியர்களின் மனங்களை பாசிசமயமாக்கி யூதர்களுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் பார்வையாளர்களாக ஆக்கினார்களோ அதே வழிமுறையைத் தான் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் குஜராத்தில் பின்பற்றியது – தேசமெங்கும் அதையே விரித்துச் செல்லும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதனால்தான் குஜராத் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக இருக்கிறது.

காவிக் கொடியவர்களின் கையில் சிக்கி தவிக்கும் தேசியக்கொடி!!


இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை, படுகொலைகளை எதிர்த்து சுதந்திரத்திற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் அனைவரும் இரத்தம் சிந்தி போராடும் கஷ்மீரிகளின் உணர்வுகளை புண்படுத்துவதற்காக திட்டமிட்டு பாசிச பா.ஜ.க சங்பரிவார தொண்டர்களை திரட்டிக்கொண்டு ஸ்ரீநகர் சென்று குடியரசு தினத்தன்று (இன்று,26,ஜனவரி.2011) தேசியக்கொடியை ஏற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து கஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது.

தேசப்பற்று, தேசியக்கொடி என்ற பெயரில் மீண்டும் சங்பரிவார் கும்பல்கள் இந்திய சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை பெரும்பான்மை மக்களிடம் விதைக்க ஆரம்பித்துள்ளது.கொடி பிடிக்க காரணமென்ன? அஜ்மீர், மாலேகான், மற்றும் மக்கா மஸ்ஜித்களில் வெடிகுண்டு வைத்து பலரின் உயிரிழப்புக்கு காரணமானது சங்பரிவார்தான் என்று பட்டவர்த்தனமாக அவர்களின் முகமூடி கழற்றியெறியப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் இச்சூழ்நிலையில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தேசப்பற்று என்ற மற்றொரு முகமூடியணிந்து வந்திருக்கிறது சங்பரிவார்.பா.ஜ.க தலைமையிலான அந்த மதவெறி சக்திகள் இன்று (26,ஜனவரி.2011) காஷ்மீர் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்து பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்காய் பிடிப்பதில் வல்லர்களான 'காவி' வந்தேறிகள் ஆங்கில 'வந்தேறிகளோடு' கைக்கோர்த்து பிரிட்டிஷ் ஆண்டைகளின் அடிமைகளாக செயல்பட்ட இவர்களால் 'மூவர்ண தேசியக் கொடி' சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருபொழுதும் பிடிக்கப்பட்டதே இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவே ஆங்கிலேய அரசை எதிர்த்த போது இவர்கள் மட்டும் பிரிட்டிஷாருக்கு வக்காலத்து வாங்கி ஒத்து ஊதினர் என்பது வரலாறு. இந்திய தேசியக் கொடியை கையிழேந்தும் அருகதை சங்பரிவாரத்திற்கு உள்ளதா? என்று வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே காவிக் கொடியை தவிர வேறொன்றும் பிடிக்காத கயவர்களுக்கு மூவர்ணக் கொடி அறவே பிடிக்காது. சங்பரிவாரின் ஆங்கில ஊதுகுழலான ஆர்கனைசர் (ஜூலை 17, 1947) இதழில், சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக 'மூவர்ண கொடியை தேர்ந்தெடுத்தது பற்றி மிகவும் வருந்தியும் காவிக் கொடிதான் தேர்ந்தெடுக்கபட்டிருக்க வேண்டும் என்றும் முகப்பு கட்டுரை வடித்தது. ஆகஸ்ட் 14 (1947) அன்று எழுதிய மற்றொரு முகப்பு கட்டுரையில் 'மூவர்ணக் கொடியை' பற்றி மிகவும் இழிவாக 'மூன்று என்ற எண்ணே அபசகுனமானது அதனால் மூன்று வர்ணங்களை கொண்ட தேசியக்கொடி பாரதமாதாவிற்கு கேடு விளைவிக்கும்' என்று பூச்சாண்டி காட்டி காவிக் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டுமென்று பலமுறை முயன்று தோற்றது.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு வெளியான கோல்வால்க்கரின் 'சிந்தனை கொத்துக்கள்' என்ற நூலில்கூட தேசியக் கொடியை விமர்சித்து காவிக் கொடியை புகழ்ந்து, இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஒருநாள் காவிக்கொடி முன் தலைவணங்க வேண்டிய நிலை உருவாகும் என்று எழுதியிருந்தது. சங்பரிவாரம் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மூவர்ணக் கொடிக்கு இன்று வரை இடமே கிடையாது. அதன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்திலோ அல்லது அது 'ஷாகா' பயிற்சி நடத்தும் மைதானங்களிலோ தேசியக் கொடியை பறக்கவிட்டதே இல்லை. ஆனால் எப்பொழுதெல்லாம் இந்திய முஸ்லிம்களை சீண்டி மதக்கலவரம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது மட்டுமே சங்பரிவாரின் கண்களுக்கு மூவர்ண தேசியக்கொடி தென்படும்.சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜோசியத்தை பள்ளிக் கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என்று முன்மொழிந்த முரளிமனோகர் ஜோஷீ தலைமையில் ஸ்ரீநகர் லால்சௌக்கிலும், உமாபாரதி தலைமையில் கர்நாடக ஈத்கா மைதானத்தில் தேசிய கொடியேற்றி கலவரம் விளைவிக்க முயன்றனர். ஹிந்துக்களுக்கு மதவெறி ஊட்ட காவிக் கொடியையும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த மூவர்ணக் கொடியையும் சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி வந்திருக்கிறது. பாப்ரி பள்ளிவாசலை இடிப்பதற்காக அதன் மண்டபங்களின் மீது ஏறிய ஹிந்து வன்முறைகும்பலின் கையில் 'காவி' கொடி இருந்ததை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது.

ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றப்போகிற சாக்கிலே கலவரம் விளைவித்து மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க முயலும் காவி பச்சோந்திகள் சட்டத்தை சந்திக்க திராணியில்லாது தாங்கள் செய்த 'காலித் தனத்துக்கு' மூவர்ணம் பூசி தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல் ஆதாயம் தேடும் இவர்களின் ஈனச் செயலை இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்டவர்கள் மக்களுக்கு தோலுரித்து காட்டவேண்டும்.

Wednesday, January 26, 2011

MMS - புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு


நமதூர் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 2011ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் இன்று நடந் சங்க பொதுக்கூட்டத்தில் வைத்து தேர்ந்தெடுக்கபட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக MDPS-ன் தலைவர் மற்றும் செயலாளர் கலந்து கொண்டனர். இதில் ஏழு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நமதூர் ஜமாத்தார்கள், முன்னால் சங்க நிர்வாகிகள், பொது மக்கள் திறலாக கலந்து கொண்டனர்.

சங்க நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு :

தலைவர் : சகோதரர். ஆசிக் ரஹ்மான்
துணைதலைவர் : சகோதரர். யாசர் ஃபஹாத்
செயலாளர் : சகோதரர். அபுரார் அஹமது
துணை செயலாளர் : சகோதரர். தஸ்ருதீன்
பொருலாளர் : சகோதரர். அப்துல் ஒபூர்

விளையாட்டுத்துறை தலைவர் : சகோதரர். முஹம்மது சியாபிக்
விளையாட்டுத்துறை துணைதலைவர் : சகோதரர். அஸ்ஸாலி ஷாஃபி

இசைத்துறை தலைவர் : சகோதரர். காமில் ஹசன்
இசைத்துறை துணைதலைவர் : சகோதரர். நஜிபுதீன்

தணிக்கையாளர் :  1. சகோதரர். அஸ்லம் அலி
                                       2. சகோதரர். முஹம்மது ரிஸ்வான்

உறுப்பினர்கள் :

1. சகோதரர். ஜாவித் ரோஷன்
2. சகோதரர். அஸ்வர் ரஹ்மான்
3. சகோதரர். மனாஸீர் அஹமது
4. சகோதரர். உபைது ரஹ்மான்
5. சகோதரர். ஹசன் சித்திக்
6. சகோதரர். அஹமது ஃபைசல்
7. சகோதரர். வாசிம் ரஹ்மான்
8. சகோதரர். முஹம்மது அஜ்மீர்
9. சகோதரர். அக்ரம் ஜாவித்

இந்த வருடம் ஜாமத்திர்கும், சங்கத்திர்கும் நல்ல நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கிடைத்திருக்கின்றனர் என்பதும், இவர்கள் இறைவழியின் அடிப்படையில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றினால் நமதூர் வளர்சிக்கு உதவியாக இருக்கும் என்பதும் நமதூர் மக்களின் பரவளான கருத்தாக இருக்கிறது.



 

Monday, January 24, 2011

கப்பலில் சஞ்சரிக்கும் புத்தகக் கண்காட்சி துபாய்க்கு வருகை

துபாய்,ஜன.24:'லோகோஸ் ஹோப்' என்ற கடலில் சஞ்சரிக்கும் கப்பலில் நடைபெறும் புத்தக கண்காட்சி துபாய் வந்தடைந்தது. 50 நாடுகளைச் சார்ந்த 400 பணியாளர்கள் இக்கப்பலில் உள்ளனர். புத்தகக் கண்காட்சி கப்பல் இரண்டு வருட சர்வதேச திட்டமாகும். வருகிற பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி இக்கப்பல் அபுதாபிக்கு செல்லும். இக்கப்பலில் பணிபுரியும் கேப்டன் உள்பட அனைத்து பணியாளர்களுமே சம்பளம் வாங்காமலேயே பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பல் பணியாளர்களில் பொறியாளர்கள்,ப்ளம்பர், புக் கீப்பர், சமையல்காரர்கள், தச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமூக சேவைகள் மூலமாகவும், இலக்கியம் மூலமாகவும் மக்களுக்கு உதவ இவர்கள் தயார். தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்த வேளையில் இவர்கள் பள்ளிக்கூடம் நிர்மாணித்தல், நூல்களை இலவசமாக வழங்குதல், இலவச மருத்துவ மற்றும் பல் மருத்துவ க்ளீனிக் ஆகிய பணிகளில் ஈடுபட்டனர்.
செய்தி:பாலைவனதூது 

நிவாரண கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் - இஸ்ரேலின் கண்துடைப்புக் கமிஷனின் விசாரணை அறிக்கை

டெல்அவீவ்,ஜன.24:இஸ்ரேலின் தடையின் காரணமாக துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸா மக்களுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை அளிப்பதற்காக சென்ற கப்பல் மீது அக்கிரமமான முறையில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேலிய ராணுவம்.

இதில் 9 துருக்கி நாட்டைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து ஐ.நா நடத்திய விசாரணையில் இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்தது.

இச்சம்பவம் துருக்கி-இஸ்ரேல் இடையேயான உறவை பாதித்தது. ஆனால், தங்களுடைய நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதுதான் என 300 பக்கங்களைக் கொண்ட இஸ்ரேலால் நியமிக்கப்பட்ட துர்கல் கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜேக்கப் துர்கலின் தலைமையில் ஐந்து இஸ்ரேலியர்களும், இரண்டு சர்வதேச கண்காணிப்பாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது இக்கமிஷன்.

துர்கல் தலைமையிலான இக்கமிஷன் ஆதாரம் சேகரிக்கும் வேளையில் கப்பல் தாக்குதலில் நேரடியாக பங்கேற்றவர்கள் வாக்குமூலம் அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:பாலைவனதூது 

அமெரிக்க சிறைகளில் சித்திரவதைகளும், கொலைகளும் அதிகரிப்பு

வாஷிங்டன்,ஜன.24:குவாண்டனாமோ உள்பட அமெரிக்க சிறைகளில் நடக்கும் கொலைகளும், சித்திரவதைகளும் தொடர்பாக ஆதாரங்களை அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன்(எ.ஸி.என்.யு) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஈராக், ஆப்கானிஸ்தான் அமெரிக்க சிறைகளும் இதில் உட்படும். அநியாயமான கொலைகளும், சிறைக் கூடங்களின் நிலையும் லிபர்டீஸ் யூனியன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

190 சிறைக் கைதிகளின் மரணம் தொடர்பாக ஆயிரக்கணக்கான ஆவணங்களை எ.ஸி.என்.யு வெளியிட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எ.ஸி.என்.யுவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் தாக்கமுற்பட்டார் எனக் கூறி அவரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு அதிகாரி பின்னர் அச்சம்பவத்திற்கு சாட்சியான ராணுவத்தினரோடு பொய் கூற கோரிய சம்பவத்தை இவ்வறிக்கையில் உதாரணமாக கூறப்பட்டுள்ளது.

ஆனால்,இச்சம்பவங்களில் உயர் அதிகாரிகளுக்கு பங்கில்லை என அவ்வறிக்கை கூறுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மேல் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்காததன் காரணமாக திரும்பவும் அதே குற்றம் நிகழ வாய்ப்பு உருவாகிறது என அவ்வறிக்கை கூறுகிறது.

அதேவேளையில், சிறைக் கைதிகளிடம் நடந்துக் கொள்வதுக் குறித்து சீரியஸாக கருதுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவிக்கிறது. மோசமான நடவடிக்கைகள் குறித்த வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. ஆனால், ராணுவம் இக்குற்றங்களை செய்ததற்கு ஆதாரமில்லை என பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் லெஃப்டினண்ட் கர்னல் கர்னல் டனியா ப்ரோட்ஸர் தெரிவித்தார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் அமெரிக்கக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செய்தி:பாலைவனதூது 

திருவனந்தபுரம்,ஜன:வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று தெரிவித்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சர் வயலார் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது; தற்போது அமலில் உள்ள சட்டவிதிப்படி வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்டு வைத்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம். இதற்காக அவர்கள் இமெயில் மூலம் வி்ண்ணப்பிக்கலாம். இந்த வாக்காளர்களின அடையாளத்தில் சந்தேகம் ஏற்பட்டால் வழக்கமான முறையில் அரசியல் கட்சிகள் புகார் கொடுக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சட்ட அமைச்சகமும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சகமும் பரிந்துரைத்துள்ளன. தேர்தல் ஆணையம் இது பற்றி பரீசிலித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின் விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,ஜன:வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சர் வயலார் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;
தற்போது அமலில் உள்ள சட்டவிதிப்படி வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்டு வைத்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம். இதற்காக அவர்கள் இமெயில் மூலம் வி்ண்ணப்பிக்கலாம். இந்த வாக்காளர்களின அடையாளத்தில் சந்தேகம் ஏற்பட்டால் வழக்கமான முறையில் அரசியல் கட்சிகள் புகார் கொடுக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சட்ட அமைச்சகமும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சகமும் பரிந்துரைத்துள்ளன. தேர்தல் ஆணையம் இது பற்றி பரீசிலித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின் விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி:பாலைவனதூது

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு பலிகடாவான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கு தயாராகும் மத்திய அரசு

புதுடெல்லி,ஜன.24:இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது நிரூபணமாகிவிட்ட சூழலில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளின் குற்றங்களுக்கு பலிகடாவாகி பல்வேறு கொடுமைகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்து சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் பயங்கரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு நிரபராதிகளாக நிரூபிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் தேவையான அனைத்து சட்டரீதியான, பொருளாதரீதியிலான உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அப்பாவிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்து, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ போன்ற சமுதாய அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய மலேகான், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் ஆகிய குண்டுவெடிப்புகளில் நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோருக்கு இதுவரை ஜாமீன் கூட கிடைக்கவில்லை. 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இத்தகைய குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைமையில் சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத் போன்ற பயங்கரவாத அமைப்புகள் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு லஷ்கர்-இ-தய்யிபா, இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு(சிமி), ஹர்கதுல் ஜிஹாத் அல் இஸ்லாமி போன்ற தடைச் செய்யப்பட்ட இயக்கங்கள் மீது குற்றம் சும்த்தப்பட்டன. பின்னர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்டது ஹிந்துத்துவா அமைப்புகள்தான் என்பது ஹேமந்த் கர்காரே நடத்திய மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும், தற்போது ராஜஸ்தான் ஏ.டி.எஸ், சி.பி.ஐ, என்.ஐ.ஏ போன்ற புலனாய்வு ஏஜன்சிகள் நடத்திய விசாரணையிலும் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் இதனை ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்நிலையில் பொய்வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சி.பி.எம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கூடுதலான குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது அஸிமானந்தாவின் வாக்குமூலத்தில் தெரியவந்ததாக சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி:பாலைவனதூது

சம்ஜோதா:தலைமறைவான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்

புதுடெல்லி,ஜன.24:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் தலைமறைவு பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு என்.ஐ.ஏ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டை பிறப்பித்துள்ளது.

சந்தீப் டாங்கே என்ற பரமானந்த், ராம்சந்திர கல்சாங்க்ரா என்ற விஷ்ணு பட்டேல், அஸ்வினி சவுகான் என்ற அமீத் ஆகியோர் மீது பஞ்ச்குலா கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரிது கார்கே ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டை பிறப்பித்துள்ளார்.

முன்னர் இந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளைக் குறித்து துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்திருந்தது. இந்த பயங்கரவாதிகள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு மட்டுமின்றி மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய குண்டுவெடிப்புகளிலும் தொடர்புடையவர்களாவர்.

இந்த 3 நபர்களையும் கைதுச் செய்தால் வழக்கின் தொடர் விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும் என என்.ஐ.ஏ ஜாமீனில் இல்லா வாரண்டை கோரிய மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சூழலில் இக்குற்றவாளிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பிக்க வேண்டுமென என்.ஐ.ஏ கோரியிருந்தது. இதனடிப்படையில் நீதிபதி 3 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கெதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான இந்திரேஷ்குமார், கொல்லப்பட்ட சுனில்ஜோஷி ஆகியோரின் உத்தரவின்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இம்மூன்று பயங்கரவாதிகளும் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர் என கைதுச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி அஸிமானந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியிருந்தான்.
செய்தி:பாலைவனதூது

தேவ்பந்த் மெளலானாவுக்கு என்ன நேர்ந்தது?

தேவ்பந்த் கல்வி கலாசாலையின் மீது நமக்கு எப்பொழுதுமே மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்திய சுதந்திர போராட்டத்தில் தேவ்பந்த் உலமாக்களின் பங்கு மகத்தானது. இந்தியாவில் இஸ்லாமிய மார்க்க கல்விக்கு தேவ்பந்த் அளித்துவரும் சேவை உண்மையிலேயே பாரட்டப்பட வேண்டிய ஒன்று. இந்நிலையில் தேவ்பந்த் மதரஸாவிலிருந்து வெளியாகும் சில ஃபத்வாக்களும், மார்க்க அறிஞரின் கூற்றும் அடிக்கடி விவாதத்தைக் கிளப்புவதுண்டு. இம்ரானா விவகாரம், வந்தேமாதரம் சர்ச்சை, பெண்கள் வேலைக்கு செல்வது தொடர்பான ஃபத்வா என தேவ்பந்த் ஊடகங்களில் அடிக்கடி விவாதத்திற்குள்ளாகும்.

வந்தேமாதரம் விவகாரத்தில் தேவ்பந்த் மேற்கொண்ட துணிச்சலான நிலைப்பாடு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், சில வேளைகளில் தேவ்பந்த் உலமாக்களின் ஃபத்வாக்களும், அறிக்கைகளும் தற்கால சூழல், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சதித் திட்டங்கள் ஆகியவற்றைக் குறித்து புரிந்துக் கொள்ளாமலேயே வெளியிடப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும்.

பாசிசம் என்ற ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கை அவ்வியக்கதுடன் மட்டும் ஒதுங்கிவிடவில்லை. அரசியல்,அதிகாரம், நீதிபீடங்கள், ஊடகங்கள் என ஊடுருவியுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் பாசிச மயமாகி நெடுங்காலமாகிவிட்டது.

இந்நிலையில் நாம் விடுக்கும் செய்திகளைக் குறித்த விழிப்புணர்வும், ஊடகங்களின் தகிடுதித்தங்கள் குறித்த எச்சரிக்கையும் தேவை என்பதை தேவ் பந்த் உலமாக்கள் உணரவேண்டும்.

சில தினங்களுக்கு முன்பாக தேவ்பந்த் மதரஸாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்தில் பிறந்து மஹராஷ்ட்ரா மாநிலத்தை வசிப்பிடமாகக் கொண்ட மெளலானா குலாம் முஹம்மது வஸ்தனவி கூறியதாக பத்திரிகைகளில் வெளியானச் செய்தி முஸ்லிம் சமுதாயத்தில் விவாதத்தை கிளப்பியிருந்தது.

அச்செய்தி இதுதான்: குஜராத்தில் மோடியின் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகவும், அங்கு கலவரங்களைக் குறித்து மீண்டும் உயர்த்தி பிடிக்கும் நிலைப்பாடு சரியல்ல என்பதுதான் அது.

பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தங்களது கண்டனத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து மெளலானா இதற்கு பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் முதல்வர் மோடியை நான் நியாப்படுத்தவோ, குற்றமற்றவர் எனவோ கூறவில்லை. குஜராத் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் புரண்ட மோடிக்கு நானும், முஸ்லிம்களும் மட்டுமல்ல, இறைவன் கூட மன்னிப்பளிக்கமாட்டான். இறைவனிடம் மோடியை பழிவாங்க பிரார்த்தனைச் செய்வோம்.

குஜராத் கலவரத்தைக் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஏன் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இதனைக் குறித்து கேள்வி எழுப்புகின்றீர்கள்? எனவும், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அக்கலவரம் மிகக் கொடூரமாக இருந்தது எனவும்தான் பதிலளித்தேன். இதன் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் எவரையேனும் பாதித்திருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதன் பெயரில் என்னைத் தேர்ந்தெடுத்த தேவ்பந்த் ஷூரா கவுன்சில்(ஆலோசனை கமிட்டி) விரும்பினால் ராஜினாமாச் செய்யவும் தயாராக இருக்கிறேன். நான் அளித்த பதிலை ஆங்கில பத்திரிகை திரித்து வெளியிட்டுள்ளது. இந்த உரையாடல் குறித்த ஒலிநாடா என்னிடம் உள்ளது.

கல்வி மற்றும் வர்த்தகத்துறையில் சக்தி பெறுவதற்கு குஜராத் முஸ்லிம்கள் நடத்தும் முயற்சிகளுக்கு திருப்தியை தெரிவித்திருந்தேன்.

மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளின் காரணமாக குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டது உண்மையாகும். அதன் பலனை முஸ்லிம்களும் அனுபவிக்கிறார்கள். இதனைத் தவிர மோடியை இதன்பெயரில் நான் புகழவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

சரி மெளலானா கூறியதுக் குறித்து பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்த அறிக்கையில் கூறியிருக்கும் செய்தி என்ன? நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்தான் கொல்லப்பட்டார்களாம். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இதனை பற்றி ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்? என பத்திரிகையாளர்களிடம் வினவுகிறார்.

பத்திரிகையாளர்கள் குஜராத் கலவரத்தைக் குறித்து கேட்டதில் என்ன தவறு? குஜராத்தைச் சார்ந்த மெளலானா இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கலாசாலையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால் இத்தகைய கேள்வி எழுந்திருக்கலாம்? பத்திரிகையாளர்கள் என்ன நோக்கத்தில் கேட்டார்களோ? என்பது வேறு விஷயம். கேள்வி கேட்கக்கூடாது என்றால் குஜராத் இனப் படுகொலையை மறக்கச் சொல்கிறாரா? மெளலானா.

இறைவனிடம் மோடியை பழிவாங்கு என பிரார்த்தித்துவிட்டு சும்மா உட்கார்ந்து விடுவோம் என கூறவருகிறாரா? மத்திய-மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களால் முஸ்லிம்கள் என்ன பயனை அடைந்துவிட்டார்கள்? அகதிகள் முகாமில் தங்கியிருப்போர் எத்தனை?முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் எல்லாம் முழுமையடைந்து விட்டதா? இனப் படுகொலைகளின் போது ஊரைவிட்டு வெளியேறிய முஸ்லிம்களெல்லாம் மீண்டும் தங்கள் வசிப்பிடம் செல்ல முடிகிறதா? கொல்லப்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைத்துவிட்டதா? முஸ்லிம்களை விட்டுவிட்டால் கூட அம்மாநிலத்தில் வாழும் ஏழை எளியோரின் நிலைமை என்ன? குஜராத்தின் வளர்ச்சிக் குறித்த உண்மைகள் என்ன? இவற்றிற்கெல்லாம் பதிலளிக்க மெளலானா தயாராகுவாரா?

பாப்ரி மஸ்ஜிதும், குஜராத்தும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் என்றும் ரிங்காரமிட்டுக் கொண்டேயிருக்கும். அதற்கு உரிய தீர்வு கிடைக்குவரை. மோடியின் தலைமையின் கீழ் நடந்த முஸ்லிம் இனப் படுகொலையை வளர்ச்சியின் பெயரால் மறந்துவிட எந்த முஸ்லிமும் தயாராகமாட்டான்.

குஜராத் இனப் படுகொலையை மறப்பது உயிரையும், மானத்தையும் இழந்துபோன அந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு செய்யும் கடுமையான துரோகமாகும்.
செய்தி:பாலைவனதூது

தேவ்பந்த் மெளலானாவுக்கு என்ன நேர்ந்தது?

தேவ்பந்த் கல்வி கலாசாலையின் மீது நமக்கு எப்பொழுதுமே மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்திய சுதந்திர போராட்டத்தில் தேவ்பந்த் உலமாக்களின் பங்கு மகத்தானது. இந்தியாவில் இஸ்லாமிய மார்க்க கல்விக்கு தேவ்பந்த் அளித்துவரும் சேவை உண்மையிலேயே பாரட்டப்பட வேண்டிய ஒன்று. இந்நிலையில் தேவ்பந்த் மதரஸாவிலிருந்து வெளியாகும் சில ஃபத்வாக்களும், மார்க்க அறிஞரின் கூற்றும் அடிக்கடி விவாதத்தைக் கிளப்புவதுண்டு. இம்ரானா விவகாரம், வந்தேமாதரம் சர்ச்சை, பெண்கள் வேலைக்கு செல்வது தொடர்பான ஃபத்வா என தேவ்பந்த் ஊடகங்களில் அடிக்கடி விவாதத்திற்குள்ளாகும்.

வந்தேமாதரம் விவகாரத்தில் தேவ்பந்த் மேற்கொண்ட துணிச்சலான நிலைப்பாடு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், சில வேளைகளில் தேவ்பந்த் உலமாக்களின் ஃபத்வாக்களும், அறிக்கைகளும் தற்கால சூழல், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சதித் திட்டங்கள் ஆகியவற்றைக் குறித்து புரிந்துக் கொள்ளாமலேயே வெளியிடப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும்.

பாசிசம் என்ற ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கை அவ்வியக்கதுடன் மட்டும் ஒதுங்கிவிடவில்லை. அரசியல்,அதிகாரம், நீதிபீடங்கள், ஊடகங்கள் என ஊடுருவியுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் பாசிச மயமாகி நெடுங்காலமாகிவிட்டது.

இந்நிலையில் நாம் விடுக்கும் செய்திகளைக் குறித்த விழிப்புணர்வும், ஊடகங்களின் தகிடுதித்தங்கள் குறித்த எச்சரிக்கையும் தேவை என்பதை தேவ் பந்த் உலமாக்கள் உணரவேண்டும்.

சில தினங்களுக்கு முன்பாக தேவ்பந்த் மதரஸாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்தில் பிறந்து மஹராஷ்ட்ரா மாநிலத்தை வசிப்பிடமாகக் கொண்ட மெளலானா குலாம் முஹம்மது வஸ்தனவி கூறியதாக பத்திரிகைகளில் வெளியானச் செய்தி முஸ்லிம் சமுதாயத்தில் விவாதத்தை கிளப்பியிருந்தது.

அச்செய்தி இதுதான்: குஜராத்தில் மோடியின் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகவும், அங்கு கலவரங்களைக் குறித்து மீண்டும் உயர்த்தி பிடிக்கும் நிலைப்பாடு சரியல்ல என்பதுதான் அது.

பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தங்களது கண்டனத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து மெளலானா இதற்கு பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் முதல்வர் மோடியை நான் நியாப்படுத்தவோ, குற்றமற்றவர் எனவோ கூறவில்லை. குஜராத் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் புரண்ட மோடிக்கு நானும், முஸ்லிம்களும் மட்டுமல்ல, இறைவன் கூட மன்னிப்பளிக்கமாட்டான். இறைவனிடம் மோடியை பழிவாங்க பிரார்த்தனைச் செய்வோம்.

குஜராத் கலவரத்தைக் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஏன் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இதனைக் குறித்து கேள்வி எழுப்புகின்றீர்கள்? எனவும், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அக்கலவரம் மிகக் கொடூரமாக இருந்தது எனவும்தான் பதிலளித்தேன். இதன் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் எவரையேனும் பாதித்திருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதன் பெயரில் என்னைத் தேர்ந்தெடுத்த தேவ்பந்த் ஷூரா கவுன்சில்(ஆலோசனை கமிட்டி) விரும்பினால் ராஜினாமாச் செய்யவும் தயாராக இருக்கிறேன். நான் அளித்த பதிலை ஆங்கில பத்திரிகை திரித்து வெளியிட்டுள்ளது. இந்த உரையாடல் குறித்த ஒலிநாடா என்னிடம் உள்ளது.

கல்வி மற்றும் வர்த்தகத்துறையில் சக்தி பெறுவதற்கு குஜராத் முஸ்லிம்கள் நடத்தும் முயற்சிகளுக்கு திருப்தியை தெரிவித்திருந்தேன்.

மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளின் காரணமாக குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டது உண்மையாகும். அதன் பலனை முஸ்லிம்களும் அனுபவிக்கிறார்கள். இதனைத் தவிர மோடியை இதன்பெயரில் நான் புகழவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

சரி மெளலானா கூறியதுக் குறித்து பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்த அறிக்கையில் கூறியிருக்கும் செய்தி என்ன? நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்தான் கொல்லப்பட்டார்களாம். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இதனை பற்றி ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்? என பத்திரிகையாளர்களிடம் வினவுகிறார்.

பத்திரிகையாளர்கள் குஜராத் கலவரத்தைக் குறித்து கேட்டதில் என்ன தவறு? குஜராத்தைச் சார்ந்த மெளலானா இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கலாசாலையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால் இத்தகைய கேள்வி எழுந்திருக்கலாம்? பத்திரிகையாளர்கள் என்ன நோக்கத்தில் கேட்டார்களோ? என்பது வேறு விஷயம். கேள்வி கேட்கக்கூடாது என்றால் குஜராத் இனப் படுகொலையை மறக்கச் சொல்கிறாரா? மெளலானா.

இறைவனிடம் மோடியை பழிவாங்கு என பிரார்த்தித்துவிட்டு சும்மா உட்கார்ந்து விடுவோம் என கூறவருகிறாரா? மத்திய-மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களால் முஸ்லிம்கள் என்ன பயனை அடைந்துவிட்டார்கள்? அகதிகள் முகாமில் தங்கியிருப்போர் எத்தனை?முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் எல்லாம் முழுமையடைந்து விட்டதா? இனப் படுகொலைகளின் போது ஊரைவிட்டு வெளியேறிய முஸ்லிம்களெல்லாம் மீண்டும் தங்கள் வசிப்பிடம் செல்ல முடிகிறதா? கொல்லப்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைத்துவிட்டதா? முஸ்லிம்களை விட்டுவிட்டால் கூட அம்மாநிலத்தில் வாழும் ஏழை எளியோரின் நிலைமை என்ன? குஜராத்தின் வளர்ச்சிக் குறித்த உண்மைகள் என்ன? இவற்றிற்கெல்லாம் பதிலளிக்க மெளலானா தயாராகுவாரா?

பாப்ரி மஸ்ஜிதும், குஜராத்தும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் என்றும் ரிங்காரமிட்டுக் கொண்டேயிருக்கும். அதற்கு உரிய தீர்வு கிடைக்குவரை. மோடியின் தலைமையின் கீழ் நடந்த முஸ்லிம் இனப் படுகொலையை வளர்ச்சியின் பெயரால் மறந்துவிட எந்த முஸ்லிமும் தயாராகமாட்டான்.

குஜராத் இனப் படுகொலையை மறப்பது உயிரையும், மானத்தையும் இழந்துபோன அந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு செய்யும் கடுமையான துரோகமாகும்.
செய்தி:பாலைவனதூது

முஸ்லிம் அணுசக்தி விஞ்ஞானிகளை கொலைச் செய்யும் மொஸாத்

டெஹ்ரான்,ஜன.24:மேற்காசிய நாடுகளில் பிரபல முஸ்லிம் விஞ்ஞானிகளின் கொலைகளில் இஸ்ரேலின் பயங்கரவாத உளவு அமைப்பான மொஸாதின் பங்கு மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஈரான் அணுசக்தி விஞ்ஞானி மாஜித் ஷஹரியாரின் கொலையில் மொஸாதின் பங்கு தெளிவானதைத் தொடர்ந்து இதுத் தொடர்பாக கூடுதல் விபரங்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டீஷ், அமெரிக்க உளவு அமைப்புகளுடன் கைக்கோர்த்துக் கொண்டு முஸ்லிம் விஞ்ஞானிகளை கொன்றொடுக்கும் நீண்ட வரலாறு இஸ்ரேலின் மொஸாத் உளவு அமைப்பிற்கு உண்டு என ஈரானின் நியூக் டாட் ஐ.ஆர் என்ற இணையதளம் கூறுகிறது.

அமெரிக்காவில் உள்பட ஏராளமான மொஸாதினால் கொல்லப்பட்ட அரபு விஞ்ஞானிகளின் பெயர்களை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

எகிப்து நாட்டைச் சார்ந்த ஸாமிர் நஜீப், நபீல் அல்க்வலானி, நபீல் அஹ்மத் ஃபுழைஃபல், அரபு உலகத்தின் ஐன்ஸ்டீன் என புகழப்படும் முஸ்தஃபா அலி முஷ்ரிஃபா, ஜமால் ஹம்தான், ஸஈத் ஸய்யித் காதிர், ஸல்வி ஹபீப், லெபனானைச் சார்ந்த இயற்பியல் விஞ்ஞானியான ரமால் ஹஸன் ரமால், அரபு உலகின் தாமஸ் ஆல்வா எடிஷன் என புகழப்படும் லெபனானைச் சார்ந்த விஞ்ஞானி ஹஸன் காமில் ஸஹாப் ஆகியோர் மொஸாதினால் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

2010 நவம்பர் 29-ஆம் தேதி ஈரானில் பேராசிரியரான மாஜித் ஷஹரியாரி கொலைச் செய்யப்பட்டார். அன்றைய தினமே மற்றொரு தாக்குதலில் ஃபரீதுன் அப்பாஸி தவானி என்ற ஈரான் விஞ்ஞானியும் கொல்லப்பட்டுள்ளார். சமீபத்தில் டெல் அவீவில் கூடிய மொஸாதின் கூட்டத்தில் ஷஹரியாரின் கொலை உள்பட பல்வேறு விஷயங்களைக் குறித்து விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.

2010 ஜனவரியில் டெஹ்ரானில் நடந்த குண்டுவெடிப்பில் அணுசக்தி விஞ்ஞானியும், பல்கலைக்கழக பேராசிரியருமான மசூத் அலி முஹம்மதி கொலைச் செய்யப்பட்டிருந்தார். டிசம்பர் மாத இறுதியில் ஈராக்கின் இளம் வயதைக்கொண்ட அணு விஞ்ஞானி முஹம்மத் அல்ஃபவ்ஸ் மர்மமனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான அவருடைய புதிய ஃபார்முலா ஏராளமான மேற்கத்திய பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

350 ஈராக் நாட்டு அணு விஞ்ஞானிகள், 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிர்யர்கள் கொலையில் மொஸாதிற்கு பங்குள்ளதாக ஏற்கனவெ செய்திகள் வெளியாகியிருந்தன. இவற்றில் முஹம்மது ஃபவுஸின் கொலை கடைசியாக நடந்ததாகும்.
செய்தி:பாலைவனதூது 

http://paalaivanathoothu.blogspot.com/2011/01/blog-post_7926.html

துபாய்,ஜன.24:யு.ஏ.இயில் வங்கிகளால் அளிக்கப்படும் க்ரெடிட் கார்டுகள் (கடன் அட்டை) வாடிக்கையாளர்களிடமிருந்து கடுமையான வட்டியை வசூலிப்பதாக அந்நாட்டில் வெளியாகும் அல் கலீஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மாதந்தோறும் 2.25 சதவீதம் முதல் 2.99 சதவீதம் வரையிலான வட்டியை யு.ஏ.இயில் வங்கிகள் வெளியிடும் க்ரெடிட் கார்டுகள் மூலம் வசூலிப்பதாக இப்பத்திரிகை குற்றஞ்சாட்டுகிறது.

வருடாந்திர வட்டிவிகிதத்தில் இது 35 சதவீதமாகும். சவூதி அரேபியா, கத்தர், பஹ்ரைன், எகிப்து போன்ற நாடுகளில் வங்கிகள் அளிக்கப்படும் க்ரெடிட் கார்டுகள் மூலம் இரண்டு சதவீதத்திற்கு குறைவான வட்டி வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
செய்தி:பாலைவனதூது 

முஸ்லிம் நாடுகளில் பரவுகிறது அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம்

சன்ஆ/அல்ஜீர்ஸ்,ஜன.24:துனீசியாவில் சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் ஆட்சியை கவிழச்செய்து அவரை நாட்டைவிட்டு துரத்தக் காரணமான ஜனநாயக வழியிலான மக்கள் திரள் போராட்டம் அயல் நாடுகளிலும் பரவுகிறது.

அல்ஜீரியா, ஜோர்டானைத் தொடர்ந்து யெமனிலும் மக்கள் அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.

பட்டினியாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்கள் ஊழலில் திளைத்துள்ள அரசுகளுக்கெதிராக போராட களமிறங்கியுள்ளனர்.

அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீர்ஸில் நேற்று நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டத்தை போலீஸ் கடுமையாக எதிர்கொண்டது. பொதுக்கூட்டங்களை தடைச் செய்யும் புதிய சட்டத்தை வாபஸ்பெற வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.

போராட்டம் பரவாமல் தடுக்க தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதனையும் மீறி போராட்டக்களத்தில் குதித்துள்ளனர் மக்கள். இது ஆட்சியாளர்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. போலீசாரின் நடவடிக்கையில் 40 பேர்களுக்கு காயமேற்பட்டது.

'ராலி ஃபார் கல்சர் அண்ட் டெமோக்ரஸி' கட்சியின் தலைவர் ஸய்யத் ஸாதி உள்பட ஏராளமானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அக்கட்சியின் பாராளுமன்றத் தலைவர் உஸ்மான் அமாசுசும் கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒருவராவார்.

மறைமுகமாக ராணுவ ஆட்சி நடைபெறும் அல்ஜீரியாவில் விலைவாசி உயர்வுக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராகவும் இம்மாதம் துவக்கத்தில் மக்கள் தங்கள் போராட்டத்தை துவக்கினர்.

துனீசியாவில் நிகழ்ந்தது போலவே தங்கள் நாட்டிலும் நிகழ வேண்டுமென்பதை விரும்புவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

யெமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யவேண்டுமனக் கோரி அந்நாட்டில் போராட்டங்கள் தொடர்கின்றன.

நேற்று ஸன்ஆ பல்கலைக்கழகத்தில் நடந்த கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாணவர்கள், சமூகசேவர்கள், எதிர்கட்சியினர் கலந்துக்கொண்ட பிரமாண்டமான கண்டனப் போராட்டம் யெமனில் முதன் முறையாக அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2500 மாணவர்கள் பங்கேற்ற கண்டனப் பேரணியில் போராட்டக்காரர்கள் அதிபருக்கெதிராக பலத்த கோஷங்களை எழுப்பினர்.

துனீசியாவின் முன்னாள் அதிபர் பின் அலியுடன் போராட்டக்காரர்கள் அப்துல்லாஹ் ஸாலிஹை ஒப்பிட்டனர்.

துனீசியாவில் இதுபோல மக்கள் வறுமையில் உழன்றபோது அரசு ஊழலில் திளைத்து கொழுத்தது என போராட்டக்காரர்கள் கூறினர். போராட்டகாரர்களுக்கெதிராக போலீஸ் கண்ணீர் புகைக்குண்டை வீசியது. 30க்கும் மேற்பட்டோர் கைதுச் செய்யப்பட்டனர்.

துறைமுக நகரமான ஏதனிலும் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர்களுக்கு காயமேற்பட்டது. 22 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அதிபர் ஆயுள் முடியும்வரை ஆட்சிபுரிய வழிவகைச் செய்யும் வகையிலான சட்டம் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

துனீசியாவில் நடந்த மக்கள் புரட்சிக்கு பிறகு விலைவாசியை கட்டுப்படுத்தவும் வரிவிதிப்பை பாதியாக குறைக்கவும் அப்துல்லாஹ் ஸாலிஹ் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் போராட்டத்தை எதிர்கொள்ள முக்கிய இடங்களில் அதிக அளவிலான போலீசாரையும், ராணுவத்தினரையும் அனுப்பியிருந்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக யெமனை ஆட்சி புரிந்துவரும் அப்துல்லாஹ் ஸாலிஹின் ஆட்சியின் கீழ் பாதிக்கும் மேற்பட்ட மக்களும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர்.

இதற்கிடையே துனீசியாவில் இடைக்கால அரசுக்கெதிரான மக்கள் எதிர்ப்பு பேரணி தலைநகரமான துனீஸை வந்தடைந்தது. மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய பின் அலியின் கீழ் பிரதமராக பதவி வகித்த முஹம்மது கன்னோசி தற்போது பிரதமராகவே தொடர்கிறார். இதற்கு எதிராகத்தான் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னோசி ஐக்கிய அரசை உருவாக்குவதாக அறிவித்திருந்தாலும், பின் அலியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைவரும் ராஜினாமாச் செய்யவேண்டுமென்பது தான் எதிர்கட்சிகள் மற்றும் மக்கள் நல இயக்கங்களின் கோரிக்கையாகும்.

போராட்டத்தில் போலீஸ்காரர்களும் பங்கேற்கின்றனர். துனீசியாவில் நடந்த போராட்டத்தில் 78 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்திருந்தாலும், 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா கூறுகிறது.
செய்தி:பாலைவனதூது

இளைஞர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்துக்கொள்ள வேண்டும் -டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

ஜன.24:துனீசியாவில் முஹம்மது பொவைஸி என்ற இளைஞரின் தற்கொலையால் மக்கள் புரட்சி ஏற்பட்டு அந்நாட்டின் சர்வாதிகாரி பின் அலி நாட்டைவிட்டு வெளியேறினார்.

இந்நிலையில் துனீசியாவை பின்பற்றி எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பட்டினி காரணமாக இளைஞர்கள் தற்கொலை முயற்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தங்களது உயிரை தாமே பறித்துக்கொள்வது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை அறிவுத்தும்விதமாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான பிரபல சிந்தனையாளர் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி விடுத்துள்ள அறிக்கையில், முஸ்லிம் அரபு இளைஞர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தீக்குளித்து தற்கொலைச் செய்வது நீங்கள் செய்யவேண்டிய வேலை அல்ல.

எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா போன்ற நாடுகளில் முஸ்லிம் இளைஞர்கள் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்துவது வெறுப்பை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தை பற்றிய கவனக் குறைவுதான் இதற்கு காரணம்.

அல்லாஹ்வின் அருளில் எவரும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது.
"அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்".(திருக்குர்ஆன் 12:87)

ஆதலால் ஒவ்வொரு கஷ்டத்திற்கு பிறகு நிச்சயமாக நிம்மதி கிடைக்கும். இரவுக்கு பின்னர்தான் விடியலே ஏற்படுகிறது. இவ்விஷயத்தில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.

எனதருமை இளைஞர்களே உங்கள் உயிர்களைக் குறித்து கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். அது அல்லாஹ்வின் மிகப்பெரும் எல்லை. உங்களை நீங்களே தீவைத்துக் கொளுத்தாதீர்கள். நீங்கள் பொறுமையாக இருங்கள், சகித்துக் கொள்ளுங்கள், நிலை குலையாமல் இருங்கள். நாளை விரைவில் வரும். இஸ்லாம் அடக்குமுறைக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராக போராட கூறுகிறது. அதற்கு தற்கொலை தேவையில்லை. இவ்வாறு கர்தாவி கூறியுள்ளார்.
செய்தி:பாலைவனதூது 

Sunday, January 23, 2011

மதீனாவில் திருக்குர்ஆன் டிஜிட்டல் ஆய்வு மையம்

ஜித்தா,ஜன.23:சவூதி அரேபியாவில் இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் ஒன்றான மதீனாவில் திருக்குர்ஆன் டிஜிட்டல் ஆய்வு மையம் ஒன்று துவக்கப்பட உள்ளது.

இணையதளங்களில் வெளியிடப்படும் தவறுதலாகவும், திருத்தியும் வெளியிடப்படும் திருக்குர்ஆன் வசனங்களை பாதுகாப்பதற்காக சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் உத்தரவின்படி இந்த டிஜிட்டல் ஆய்வு மையம் துவக்கப்படவுள்ளது.

திருக்குர்ஆன் கல்வி, ஓதுதல் ஆகியவற்றிற்கான கம்யூட்டர் புரோகிராம்கள், இணையதளங்களுக்கான அதிகாரப்பூர்வ மையமாக இந்த டிஜிட்டல் ஆய்வு மையம் செயல்படும். இம்மையம் மதீனாவில் கிங் ஃபஹத் திருக்குர்ஆன் காம்ப்ளக்ஸின் கீழ் துவக்கப்படவுள்ளது.

திருக்குர்ஆன் அறிஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த ஆய்வுமையத்தில் செயல்படுவார்கள் என கிங் ஃபஹத் திருக்குர்ஆன் காம்ப்ளக்ஸ் பொதுச்செயலாளர் முஹம்மது அல் ஊஃபி தெரிவித்தார்.

சில இணையதளங்கள் வெளியிடும் திருக்குர்ஆன் வசனங்களில் தவறுகள் காணப்படுகின்றன. ஆய்வு மையத்தின் வல்லுநர்கள் இந்த திருக்குர்ஆன் வசனங்களை படித்து, ஆய்வுச் செய்வார்கள். தவறுகளில்லை என உறுதிச் செய்தபிறகு அவற்றிற்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும். பரிசோதித்த வசனங்களை வெளியிடுவதற்கான லைசன்ஸாக இந்த சான்றிதழ் அமையும் என முஹம்மது அல் ஊஃபி தெரிவித்தார்.

பரிசுத்த திருக்குர்ஆனின் சேவைக்காக சவூதி அரேபியா அளித்துவரும் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் டிஜிட்டல் ஆய்வுமையம் நிரூபிக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி:பாலைவனதூது 

ஈரான் அணுசக்தித் திட்டம்: துருக்கியில் பேச்சுவார்த்தை துவங்கியது

டெஹ்ரான்,ஜன:சர்ச்சைக்குரிய ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் குறித்த பேச்சுவார்த்தை உலகின் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையே துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் துவங்கியது. இப்பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படாது என பொதுவாக கருதப்படுகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஜெர்மனியும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டுவதற்கான திட்டம் அணுஆயுதங்களை உற்பத்திச் செய்வதற்கான திரைமறைவு வேலை என மேற்கத்திய நாடுகள் ஈரானின் மீது குற்றஞ்சுமத்துகின்றன. ஆனால், இதனை மறுக்கும் ஈரான், எரிசக்திக்காக யுரேனியத்தை செறிவூட்டுவது எங்களது உரிமை எனக்கூறுகிறது.

ஐரோபிய யூனியனின் காதரின் ஆஸ்டன் இப்பேச்சுவார்த்தைக்கு தலைமை வகிக்கிறார். ஈரானின் அணு சக்தி மத்தியஸ்தர் ஸயீத் ஜலீலி பேச்சுவார்த்தையில் பங்கேற்கு ஈரான் குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.

கடந்த மாதம் ஜெனீவாவில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் இரு பிரிவினர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. சர்வதேச அரசியலின் பிரச்சனைகள் குறித்து இஸ்தான்புல் மாநாட்டில் எழுப்ப விரும்புவதாக ஜலீல் தெரிவித்தார்.

சர்வதேச நிராயுத மயமாக்கல், அணுஆயுத பரவல் தடுப்பு, இஸ்ரேலின் அணு ஆயுத பலம் ஆகியவற்றை பேச்சுவார்த்தையில் உட்படுத்தவேண்டும் என்பது ஈரானின் கோரிக்கையாகும். ஆனால், பேச்சுவார்த்தை ஈரான் பிரச்சனைகள் குறித்து மட்டுமே என பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளும் ஆறு நாடுகளும் கூறுகின்றன.

ஐ.நா ஈரானுக்கெதிராக ஒருதலைபட்சமாக அதிக அளவிலான தடைகளை ஏற்படுத்தியதுடன் வேறொரு நாட்டிற்கு யுரேனியத்தை ஒப்படைக்கலாம் என்ற ஈரானின் கோரிக்கையை அமெரிக்காவும் அதன் கூட்டணிநாடுகளும் நிராகரித்த சூழலில் அணுசக்தி விவகாரத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.

நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலான தடையை நீக்கும் கோரிக்கையை பேச்சுவார்த்தையின் போது எழுப்புவோம் என ரஷ்ய பிரதிநிதி ஸெர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ஆனால், இதனை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் நிராகரித்துவிட்டார்.

கூடுதலான கடுமையான தடைகளை ஈரான் மீது ஏற்படுத்த வேண்டுமென்பது அமெரிக்காவின் விருப்பமாகும்.
செய்தி:பாலைவனதூது

எடியூரப்பா மீது வழக்குத்தொடர அனுமதி: எதிர்ப்பு தெரிவித்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெறியாட்டம்

பெங்களூர்,ஜன.22:ஆளும் பாஜக அறிவித்துள்ள கர்நாடக பந்த் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்து வருகின்றனர். இதுவரை 31 பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. நகரில் உள்ள அனைத்து பேருந்து பணிமனைகளையும் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

பெங்களூர் ஜெயநகர், ஆர்கே புரம், எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களில் பேருந்துகள் அடித்து நொறுக்கி எரிக்கப்பட்டன. தும்கூரில் துருவீகரேயிலும் அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டன.

பெங்களூருக்கு வெளியே ஹாஸன், தேவநகரே மாவட்டத்தின் பல பகுதிகளில் பேருந்துகள் தொடர்ந்து எரிக்கப்பட்டு வருகின்றன.

பெங்களூர் பழைய மெட்ராஸ் சாலை கலவரக்காரர்களால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மூடப்பட்டது. அங்குள்ள டின் பேக்டரிக்கு பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டனர். அங்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜின் கொடும்பாவிகளைக் கொளுத்தினர். ஆனால் போலீசார் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஒரு ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி கலாட்டா செய்த போது மட்டும் போலீசார் தலையிட்டு அனுப்பி வைத்தனர்.

ஷிமோகா, பெல்காம் உள்ளிட்ட கர்நாடகத்தின் உள்ளார்ந்த பகுதிகளிலும் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக உத்தர் கர்நாடகப் பகுதிகளில் பா.ஜ.கவைச் சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பொது சொத்துக்களை சூறையாடி வருகின்றனர்.
செய்தி:பாலைவனதூது 

ஆஸ்திரேலிய பாதிரியார் கொலை தாரா சிங்குக்கு தூக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி,ஜன.22:ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவருடைய 2 மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் தாரா சிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

ஒரிஸாவில் கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவருடைய 2 மகன்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங்குக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாராசிங் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரியது.

இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அதில், 'அரிதிலும் அரிதான' வழக்கில் மட்டுமே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு அந்த பிரிவில் வரவில்லை. எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:பாலைவனதூது 

சதாம் ஹுசைனின் நாவல் திரைப்படமாகிறது

லண்டன்,ஜன.22:முன்னாள் ஈராக் அதிபரும், அமெரிக்க கைக்கூலிகளால் தூக்கிலிடப்பட்ட சதாம் ஹுசைன் எழுதிய நாவல் ஹாலிவுட்டில் திரைப்படமாக தயாரிக்கப்படவிருக்கிறது.

சதாமின் 'ஸபீபாவும் மன்னரும்' என்ற காதல் நாவலை பாரமவுண்ட் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்கிறது.

2000 ஆம் ஆண்டு வெளியான இந்நாவல் சாதாரண பெண்ணான ஸபீபாவுடன் மத்திய கால ஆட்சியாளர் ஒருவர் காதல் வயப்படுவதை கூறுவதாகும். இந்நூல் அதிகளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பாரமவுண்ட் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகை சச்சா பரோன் கோஹெனை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சன் ஆன்லைன் தெரிவிக்கிறது.

'ப்ரூனோ' 'பாரக்' திரைப்படங்களின் இயக்குநர் லாரி சார்ல்ஸ் இத்திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
செய்தி:பாலைவனதூது 

Friday, January 21, 2011

குழந்தைகளை கொன்று குவித்த கொடூர மருத்துவர்

இலண்டன் : தன்னிடம் பிரசவம் பார்க்க வந்த வெளிநாட்டவர் மற்றும் ஏழை பெண்களுக்கு முறைகேடான அபார்ஷன் செய்ததாகவும் ஏழு குழந்தைகளின் முதுகெலும்பை கத்தரிக்கோலின் உதவியுடன் துண்டித்துக் கொன்றதாகவும் அமெரிக்க மருத்துவரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிலாடெல்பியா மருத்துவர் கெர்மிட் கோஸ்னல் 15 வயது பள்ளி மாணவன் உள்ளிட்ட 9 பணியாளர்களின் உதவியுடன் இக்காட்டுமிராண்டி செயலை செய்ததாக டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது. 69 வயதான கோஸ்னல் முறைகேடான அபார்ஷனின் போது அதிக அனஸ்தீஷியா கொடுத்ததால் 41 வயது தாயரையும் கொன்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

கோஸ்னல் தன் 30 வருட மருத்துவ பணியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பெண்கள் மருத்துவ சங்கம் என பெயரிடப்பட்டுள்ள அம்மருத்துவமனை உண்மையில் கொடூரங்களின் வீட்டை போல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனை முழுக்க ஏராளமான பைகளும் அபார்ஷன் செய்யப்பட்ட கரு உள்ளடக்கிய கண்ணாடி குவளைகளுமாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி :பாலைவனதூது

பின் அலியின் உறவினர்கள் கைது

துனீஸ்,ஜன.21:முன்னாள் துனீசிய அதிபர் ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் உறவினர்கள் 33 பேர் கைதுச் செய்யப்பட்டனர். நாட்டைவிட்டு வெளியேற திட்டமிட்டிருந்த சூழலில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

பழையவற்றையெல்லாம் திருத்திவிட்டு புதிய சுதந்திர சட்டத்திட்டமும், பத்திரிகை சுதந்திரமும் உருவாக்கப்படும் என இடைக்கால அதிபர் ஃபுஆத் முபஸ்ஸஹ் அறிவித்துள்ளார். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலைச் செய்யப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பின் அலியின் உறவினர்கள் வீட்டில் நடத்திய ரெய்டில் பெருமளவிலான தங்கமும், நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. துனீசிய அரசு அதிகாரிகள் பலகோடி டாலர் சுவிஸ் வங்கியில் முதலீடுச் செய்துள்ளதாக அவ்வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இடைக்கால அரசின் அனைத்து அமைச்சர்களும் பின் அலியின் கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்தனர். ஆனால், அவர்கள் பதவியில் தொடர்கின்றனர்.

துனீசியாவில் சர்வாதிகார ஆட்சியின் ஊழல் மற்றும் வறுமையை எதிர்த்து உருவான மக்கள் புரட்சியில் அந்நாட்டு சர்வாதிகாரி பின் அலி நாட்டை விட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனால், பின் அலியின் கட்சியைச் சார்ந்த அனைவரையும் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.
செய்தி:பாலைவனதூது 

Dua For Gaza