Monday, January 24, 2011

அமெரிக்க சிறைகளில் சித்திரவதைகளும், கொலைகளும் அதிகரிப்பு

வாஷிங்டன்,ஜன.24:குவாண்டனாமோ உள்பட அமெரிக்க சிறைகளில் நடக்கும் கொலைகளும், சித்திரவதைகளும் தொடர்பாக ஆதாரங்களை அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன்(எ.ஸி.என்.யு) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஈராக், ஆப்கானிஸ்தான் அமெரிக்க சிறைகளும் இதில் உட்படும். அநியாயமான கொலைகளும், சிறைக் கூடங்களின் நிலையும் லிபர்டீஸ் யூனியன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

190 சிறைக் கைதிகளின் மரணம் தொடர்பாக ஆயிரக்கணக்கான ஆவணங்களை எ.ஸி.என்.யு வெளியிட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எ.ஸி.என்.யுவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் தாக்கமுற்பட்டார் எனக் கூறி அவரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு அதிகாரி பின்னர் அச்சம்பவத்திற்கு சாட்சியான ராணுவத்தினரோடு பொய் கூற கோரிய சம்பவத்தை இவ்வறிக்கையில் உதாரணமாக கூறப்பட்டுள்ளது.

ஆனால்,இச்சம்பவங்களில் உயர் அதிகாரிகளுக்கு பங்கில்லை என அவ்வறிக்கை கூறுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மேல் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்காததன் காரணமாக திரும்பவும் அதே குற்றம் நிகழ வாய்ப்பு உருவாகிறது என அவ்வறிக்கை கூறுகிறது.

அதேவேளையில், சிறைக் கைதிகளிடம் நடந்துக் கொள்வதுக் குறித்து சீரியஸாக கருதுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவிக்கிறது. மோசமான நடவடிக்கைகள் குறித்த வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. ஆனால், ராணுவம் இக்குற்றங்களை செய்ததற்கு ஆதாரமில்லை என பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் லெஃப்டினண்ட் கர்னல் கர்னல் டனியா ப்ரோட்ஸர் தெரிவித்தார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் அமெரிக்கக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza