Thursday, January 27, 2011

சிறப்பாக பணியாற்றிய 64 முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதக்கம்.


புதுடெல்லி,ஜன.27:சிறப்பான சேவைபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்படும். இந்த ஆண்டு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 52 பேராவர், ராணுவத்தில் பதக்கம் பெற்றவர்கள் 12 பேரும் மொத்தம் 64 பேர் பதக்கம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தலைவர் பதக்கம் 4 பிரிவுகளில் வழங்கப்படும்.தமிழகத்தில் குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற உயர் அதிகாரிகள் விபரம்.: எஸ்.எம்.முகமது இக்பால்(காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை). எஸ்.நிஜாமுதீன் (காவல்துறைக் கண்காணிப்பாளர்-திருச்சி மாவட்டம்) .ப்.எம்.ஹுசேன் (காவல்துறைக் கண்காணிப்பாளர் - தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை). எஸ்.அப்துல்கனி (கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-வது பட்டாலியன், உளுந்தூர்பேட்டை).கே.காதர்கான் (தலைமைக் காவல் அதிகாரி, சிறப்பு அதிரடிப்படை- ஈரோடு). ராணுவத்தில் வீரதீரச் செயல் மற்றும் சிறப்பான சேவை புரிந்தோர் 440 பேருக்கு வழங்கப்பட்ட குடியரசு தலைவர் பதக்கத்தில் 12 முஸ்லிம்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ சேவைக்காக வழங்கப்படும் 3-வது பெரிய பதக்கமான ஸவ்ரிய சக்ரா பதக்கம் பெற்றவர்களில் முஹம்மது ஷஃபியும் ஒருவராவார். 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza