Monday, January 24, 2011

சம்ஜோதா:தலைமறைவான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்

புதுடெல்லி,ஜன.24:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் தலைமறைவு பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு என்.ஐ.ஏ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டை பிறப்பித்துள்ளது.

சந்தீப் டாங்கே என்ற பரமானந்த், ராம்சந்திர கல்சாங்க்ரா என்ற விஷ்ணு பட்டேல், அஸ்வினி சவுகான் என்ற அமீத் ஆகியோர் மீது பஞ்ச்குலா கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரிது கார்கே ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டை பிறப்பித்துள்ளார்.

முன்னர் இந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளைக் குறித்து துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்திருந்தது. இந்த பயங்கரவாதிகள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு மட்டுமின்றி மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய குண்டுவெடிப்புகளிலும் தொடர்புடையவர்களாவர்.

இந்த 3 நபர்களையும் கைதுச் செய்தால் வழக்கின் தொடர் விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும் என என்.ஐ.ஏ ஜாமீனில் இல்லா வாரண்டை கோரிய மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சூழலில் இக்குற்றவாளிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பிக்க வேண்டுமென என்.ஐ.ஏ கோரியிருந்தது. இதனடிப்படையில் நீதிபதி 3 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கெதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான இந்திரேஷ்குமார், கொல்லப்பட்ட சுனில்ஜோஷி ஆகியோரின் உத்தரவின்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இம்மூன்று பயங்கரவாதிகளும் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர் என கைதுச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி அஸிமானந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியிருந்தான்.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza