Saturday, January 29, 2011

பொய் வழக்குகளில் சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுதலைச் செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம்

புதுடெல்லி,ஜன.:பயங்கரவாதத்தின் பெயரால் பொய் வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பெரிய அளவிலான பிரச்சார நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது.

வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மார்ச்-26 வரை இப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்த எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது.

நிரபராதிகளை விடுதலைச் செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ நேரடியாகவோ அல்லது பொதுநலன் வழக்கையோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.

அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெளிவான பிறகும் நிரபராதிகள் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு கூறியது.

சிறுபான்மையினர், தலித்துகள், இதர ஒடுக்கப்பட்ட ஜாதியினர் ஆகியோரின் எழுச்சி என்ற செயல் திட்டமும் பிரச்சார நிகழ்ச்சிகளில் எடுத்துக் காட்டப்படும்.

பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், சுவர் விளம்பரம், வாகன பிரச்சார ஊர்வலம், தெருமுனைக் கூட்டங்கள், மக்களின் புகார்களை பெறுதல் ஆகியன இப்பிரச்சார நிகழ்ச்சிகளில் இடம்பெறும். இத்துடன் ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளும் பேசப்படும். மேலும் இந்நிகழ்ச்சியின்போது தேசிய தலைமையில் ஒரு குழு பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். மார்ச் 27-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் இப்பிரச்சார நிகழ்ச்சி நிறைவுறும்.

மார்ச் மாதம் 11-ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது. புதிய செயற்குழுவும், நிர்வாகிகளும் மார்ச் 26-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தேசிய தலைவர் இ.அபூபக்கர் தலைமை வகித்தார். செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகானும், பொதுச்செயலாளர் எ.ஸயீதும் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். ஊழல், விலைவாசி உயர்வு, பயங்கரவாதம் ஆகிய விஷயங்களில் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூரில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுத்த அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான பா.ஜ.க குடியரசு தினத்தில் கஷ்மீரில் தேசிய கொடியை ஏற்ற முயற்சித்தது பிரச்சார நாடகம் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு கருத்துத் தெரிவித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza