Friday, January 21, 2011

பின் அலியின் உறவினர்கள் கைது

துனீஸ்,ஜன.21:முன்னாள் துனீசிய அதிபர் ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் உறவினர்கள் 33 பேர் கைதுச் செய்யப்பட்டனர். நாட்டைவிட்டு வெளியேற திட்டமிட்டிருந்த சூழலில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

பழையவற்றையெல்லாம் திருத்திவிட்டு புதிய சுதந்திர சட்டத்திட்டமும், பத்திரிகை சுதந்திரமும் உருவாக்கப்படும் என இடைக்கால அதிபர் ஃபுஆத் முபஸ்ஸஹ் அறிவித்துள்ளார். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலைச் செய்யப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பின் அலியின் உறவினர்கள் வீட்டில் நடத்திய ரெய்டில் பெருமளவிலான தங்கமும், நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. துனீசிய அரசு அதிகாரிகள் பலகோடி டாலர் சுவிஸ் வங்கியில் முதலீடுச் செய்துள்ளதாக அவ்வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இடைக்கால அரசின் அனைத்து அமைச்சர்களும் பின் அலியின் கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்தனர். ஆனால், அவர்கள் பதவியில் தொடர்கின்றனர்.

துனீசியாவில் சர்வாதிகார ஆட்சியின் ஊழல் மற்றும் வறுமையை எதிர்த்து உருவான மக்கள் புரட்சியில் அந்நாட்டு சர்வாதிகாரி பின் அலி நாட்டை விட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனால், பின் அலியின் கட்சியைச் சார்ந்த அனைவரையும் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza