Monday, January 24, 2011

நிவாரண கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் - இஸ்ரேலின் கண்துடைப்புக் கமிஷனின் விசாரணை அறிக்கை

டெல்அவீவ்,ஜன.24:இஸ்ரேலின் தடையின் காரணமாக துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸா மக்களுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை அளிப்பதற்காக சென்ற கப்பல் மீது அக்கிரமமான முறையில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேலிய ராணுவம்.

இதில் 9 துருக்கி நாட்டைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து ஐ.நா நடத்திய விசாரணையில் இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்தது.

இச்சம்பவம் துருக்கி-இஸ்ரேல் இடையேயான உறவை பாதித்தது. ஆனால், தங்களுடைய நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதுதான் என 300 பக்கங்களைக் கொண்ட இஸ்ரேலால் நியமிக்கப்பட்ட துர்கல் கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜேக்கப் துர்கலின் தலைமையில் ஐந்து இஸ்ரேலியர்களும், இரண்டு சர்வதேச கண்காணிப்பாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது இக்கமிஷன்.

துர்கல் தலைமையிலான இக்கமிஷன் ஆதாரம் சேகரிக்கும் வேளையில் கப்பல் தாக்குதலில் நேரடியாக பங்கேற்றவர்கள் வாக்குமூலம் அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza