Thursday, December 26, 2013

இளம்பெண்ணை கர்நாடகாவிலும் குஜராத் போலீஸ் கண்காணித்தது! – குலைல் டாட் காம்


spy

புதுடெல்லி: பெங்களூரைச் சார்ந்த கட்டிட கலை வல்லுநரான இளம்பெண்ணை குஜராத்தில் மட்டுமல்ல; கர்நாடகாவிலும் மோடியின் போலீஸ் கண்காணித்தது என்று குலைல் டாட் காம் இணையதளம் ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்கால கணவர், உறவினர்கள், பெற்றோர் ஆகியோர் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கியதை தொடர்ந்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் நோக்கம் இளம்பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை குறித்து அறியும் ஆவலே என்பது தெரிய வந்துள்ளது.

குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும் மோடியின் உற்ற தோழனுமான அமித் ஷாவின் உத்தரவின் பேரில் குஜராத் போலீஸ் பெங்களூரைச் சார்ந்த கட்டிட கலை வல்லுநரான இளம்பெண்ணை கண்காணித்தும், அவருடைய தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டதாகவும் புலனாய்வு இணையதளங்களான குலைல் டாட் காமும், கோப்ரா போஸ்டும் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி ஆதாரத்துடன் வெளியிட்டன.
கண்காணிப்பிற்கு தலைமை வகித்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எஸ். சிங்கால் மற்றும் அமித் ஷாவுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல்களை அன்று இரு இணையதளங்களும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. தற்போது சிங்காலும், குஜராத் போலீஸின் முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. ஏ.கே. சர்மாவுக்கும் இடையேயான 36 தொலைபேசி உரையாடல்களை குலைல் வெளியிட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு இளம்பெண்ணையும், அவரது உறவினர்களையும் குஜராத் போலீஸ் சட்டவிரோதமாக கண்காணித்து வந்தது. மேலும் அன்றைய கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அரசின் உதவியுடன் அங்கும் குஜராத் போலீஸ் கண்காணித்துள்ளது. குஜராத் போலீஸ், கர்நாடகா போலீசிடம் இளம்பெண்ணின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க கோரிக்கை விடுத்தது தொலைபேசி உரையாடல்களிலிருந்து தெரிய வருகிறது.
கர்நாடகா உள்துறை செயலாளர் இக்கோரிக்கையை மறுத்தார் என்றும் உரையாடலில் கூறப்படுகிறது. இந்திய தொலைபேசி சட்டத்தின் பிரிவு 419 (ஏ) படி மத்திய உள்துறை செயலாளரோ, உள்துறை செயலாளரோ உத்தரவிட்டால் மட்டுமே ஒருவருடைய தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க முடியும்.
இளம்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து அறிவதற்காகவே அவர் கண்காணிக்கப்பட்டார் என்பது தொலைபேசி உரையாடல்களில் இருந்து தெளிவாகிறது.
கண்காணிப்பு விவாதம் குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு நியமித்த குழு கேலிக்குரியதாக மாறும் வாய்ப்புள்ளது. குஜரத்திற்கு வெளியே கண்காணிப்பை நடத்துவது குறித்து விசாரணை நடத்த இக்குழுவிற்கு அதிகாரமில்லை.
பிரதீப் சர்மா ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் இளம்பெண்ணுடன் குஜராத் போலீஸ் கண்காணித்தது. மோடி தங்கிய இடத்தில் இளம்பெண்ணும் தங்கியிருந்தார் என்று பிரதீப் சர்மா கூறியிருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza