பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் வடக்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் ஊராட்சியில் அமைந்துள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் இரு தினங்களாக நடைபெற்றுள்ளது.அதனை தொடர்ந்து இன்று(14.06.2014) மாலை தேவிப்பட்டிணத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கையில் உருட்டுக்கட்டை ,சீருடையுடன் வீதிகளில் பேரணியாக சென்றுள்ளனர்.
இதில்உள்ளூர் அமைப்பினருடன் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சார்ந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.காவல்துறையின் அனுமதி பெறாமலும்,ஊர்வலம் நடத்தக்கூடாது என நீதிமன்ற தடை உத்தரவு உள்ள பகுதிகளிலும், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியிலும் ஊர்வலமாக செல்ல முயன்றுள்ளனர்.காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் கட்டுப்படாமல் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் தடையை மீறியுள்ளனர்.
மேலும் தற்போது ஆங்காங்கே உள்ள கோயில்களில் மதவாத குழுக்களும்,சமூக விரோத கும்பல்களும் குழுமி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் இப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் மிகவும் அச்சத்துடனும்,பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் இவ்விசயத்தில் தலையிட்டு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை நிலைநாட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment