குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சாதிக் ஜமால் வழக்கில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்துவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஜனவரியில் சாதிக் ஜமால் என்பவர் போலீசாரால் தீவிரவாதி எனக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது ஐ.பியில் இணை இயக்குநராக பணிபுரிந்தார் நேச்சல் சாந்து. தற்போது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.
குஜராத் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குஜராத் போலீசார் கஸ்டடியில் சாதிக் 10 நாட்கள் இருந்ததும் அவர் போலீசாராலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பாக நேச்சல் சாந்துவிடம் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் மேலும் பல குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
source : newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment