Sunday, February 2, 2014

அஸிமானந்தா வெளியிட்ட புதிய அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டளையின் படியே தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன!


RSS

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அனுமதியும், ஆசியும் வழங்கியதாக ஹரியானா மாநிலம் அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளார். காரவன் மாத இதழுக்காக அதன் எடிட்டோரியல் மானேஜர் லீனாகீதா ரகுநாத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதுக்குறித்து அஸிமானந்தா கூறியது: தீவிரவாத தாக்குதல்கள் கட்டாயம் தேவை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இதனை தொடர்பு படுத்தாதீர்கள் என்று 2005-ஆம் ஆண்டு மோகன் பாகவத்தும், இந்திரேஷ் குமாரும் அறிவுறுத்தினார்கள். சூரத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் கான்க்ளேவில் இந்தூரில் பிரச்சாரக்கான சுனில் ஜோஷியின் முன்னிலையில் வைத்து இந்தவிவாதம் நடந்தது.”ஆர்.எஸ்.எஸ் நேரடியாக குண்டுவெடிப்புகளில் ஈடுபடாது. குண்டுவெடிப்பு நடந்தால் நாங்கள் உடனிருப்போம். குண்டுவெடிப்புகள் நடத்துவது சங்க்பரிவாரத்திற்கு வசதியானது. பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது.இதனை க்ரிமினல் குற்றமாக கருதுவதற்கு பதிலாக சித்தாந்தரீதியாக மக்கள் காண்பார்கள். தயவுச் செய்து இதனைச் செய்யுங்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் அனைத்து ஆசியும் இதற்கு உண்டு”- மோகன் பாகவத் உற்சாகப்படுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு குண்டுவெடிப்புகளில் பங்கில்லை என்று தான் ஒருபோதும் கூறியதில்லை என்று சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளார். சுவாமி அஸிமானந்தா 119 பேர் கொல்லப்பட்ட 5 குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் டாங் பகுதியில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு தான் தலைமை தாங்கியதாக அஸிமானந்தா ஒப்புக்கொண்டுள்ளார். குண்டுவெடிப்புகளுக்கு உதவி அளித்தவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் என்றும் அஸிமானந்தா தெரிவித்துள்ளார்.

Source : thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza