Wednesday, December 11, 2013

முஸஃபர் நகர் கூட்டு பாலியல் வன்கொடுமை:வாக்குமூலம் அளித்த பெண்களின் வீடுகள் தீக்கிரை!


fire home

முஸஃபர் நகர்: உத்தரபிரதேச மாநிலம் முஸஃபர்நகரில் நடந்த கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.முன்னர் 6 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்திருந்தனர்.

இதில் இரண்டு பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். முஸஃபர் நகர் மாவட்டம் ஃபகானா கிராமத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.கிரிமினல் நடவடிக்கை சட்டத்தின் படி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.நேற்று வாக்குமூலம் அளித்தவர்களின் வீடுகளைவன் முறையாளர்கள் தீக்கிரையாக்கினர்.மீதமுள்ள நான்கு பெண்கள் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள்.
Source : Thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza