ருத்ரப்பூர் (உத்தரகாண்ட்) : உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக ருத்ரப்பூர் நீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2011ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ருத்ரப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்தக் கலவரத்தை தூண்டியதாக ராஜ்குமார் துக்ரால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி சிபிசிஐடி போலீஸார் ருத்ரப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி அசுதோஷ் மிஷ்ரா, ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார்.
இதுபற்றி உத்தம்சிங் நகர் சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளர் ரிதிம் அக்ரவால் கூறும்போது, “ராஜ்குமார் துக்ராலின் வீட்டில், ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளோம்.
சரண் அடையாவிட்டால் அவருக்கு எதிரான நடவடிக்கையை உடனடியாகத் தொடங்குவோம்” என்றார்.
இவ்வழக்கில் ராஜ்குமார் துக்ராலுக்கு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment