இராமாநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயண போராட்டம் இன்று 24.12.2013 பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது.
பெரியபட்டினம் முதல் களிமன்குண்டு வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தரவேண்டியும், பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர் நியமனம் செய்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுவர் அமைக்க கோரியும், இராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் வரை வந்து செல்லும் பேருந்து காலை, மாலை பள்ளிகளுக்கு செல்லும் மீனவ தொழில் செய்துவரும் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த 55 மாணவர்கள் நலன் கருதி பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு வரை சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் நடைபயண போராட்டம் இன்று பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் பைரோஸ் கான், மாவட்ட செயலாளர்கள் அப்துல் ஜமீல், செய்யது இப்ராஹீம், தொகுதி செயலாளர் செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.