பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராம்நாடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் நேற்று (06.12.2013) நடைபெற்றது.
இராம்நாடு வடக்கு மாவட்டம் பனைக்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அப்துல் நாசர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஹமீது இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வர்த்தக அணி மாவட்ட தலைவர் அஸ்கர் அலி,அன்சர்,ஹாஜி நதார்ஷா ,திருவாடனை தலைவர் சாஹிர்தீன்,செயலாளர் ரியாஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் இராம்நாடு தொகுதி தலைவர் அப்பாஸ் அலி ஆலிம், ஜாமியா இர்பானுள் உலூம் அடபிக் கல்லூரி தலைவர், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஜக்கரியா ஆலிமா வர்கள் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக சகோதரர் ரினோஷ் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள்,பொதுமக்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment