Thursday, December 26, 2013

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபயணம்.100 க்கும் மேற்ப்பட்டோர் கைது!

periyapattinam
 இராமாநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயண போராட்டம் இன்று 24.12.2013 பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது.

பெரியபட்டினம் முதல் களிமன்குண்டு வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தரவேண்டியும், பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர் நியமனம் செய்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுவர் அமைக்க கோரியும், இராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் வரை வந்து செல்லும் பேருந்து காலை, மாலை பள்ளிகளுக்கு செல்லும் மீனவ தொழில் செய்துவரும் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த 55 மாணவர்கள் நலன் கருதி பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு வரை சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் நடைபயண போராட்டம் இன்று  பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது. இதில்  மாவட்ட துணை தலைவர் பைரோஸ் கான், மாவட்ட செயலாளர்கள் அப்துல் ஜமீல், செய்யது இப்ராஹீம், தொகுதி செயலாளர் செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடைபயணத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.மேலும் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1524842_581885205227989_1231865261_n periyapattinam protest periyapattinam
periyapattinam

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza