Friday, December 13, 2013

ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேஷனுக்கு முகுந்தன் சி.மேனன் விருது!


Nchro

கோழிக்கோடு: பிரபல மனித உரிமை ஆர்வலரும், என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் ஸ்தாபகபொதுச் செயலாளருமான மறைந்த முகுந்தன் சி.மேனன் பெயரில் ஆண்டு தோறும் என்.சி.ஹெச்.ஆர்.ஓ (தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு) மனிதஉரிமை விருதை வழங்கி வருகிறது. இவ்விருது மனித உரிமை மற்றும்சுற்றுச்சூழல் தளத்தில் சிறப்பாக பணியாற்றிய நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு இவ்விருது ஜாமிஆடீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசனுக்கு (ஜெ.டி.எஸ்.எ) வழங்கப்படுகிறது.பொய்க்குற்றங்களை சாட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களின் பிரச்சனையை தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டு வந்ததில் ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசனின் பங்குபாராட்டத்தக்கது என்று விருதுக்கான நடுவர்கள் குழு தெரிவித்தது.
2008-ஆம்ஆண்டு நிகழ்ந்த பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரின் ரகசியங்களை ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் வெளிக்கொணர்ந்தது.தீவிரவாதம்,தடைச்செய்யப்பட்ட இயக்கங்களின் பெயரால் நிரபராதிகளை சிறையில் அடைத்ததுக்குறித்த உண்மைகளை வெளியுலகிற்கு தோலுரித்துக்காட்டிய ஜாமிஆ டீச்சர்ஸ் அசோசியேஷன், மரணத் தண்டனை, யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டம் ஆகியவற்றைக் குறித்து நூல்களை வெளியிட்டுள்ளது.
25 ஆயிரம் ரூபாயும், சான்றிதழ் பட்டயமும் அடங்கியதே இவ்விருதாகும். ஜனவரிமாதம் டெல்லியில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படும்.பேராசிரியர்நாகரி பாப்பையா (பெங்களூர்), பேராசிரியர் ஆர்.ரமேஷ் (பெங்களூர்),என்.பி.சேக்குட்டி (கேரளா), ஜே.தேவிகா (திருவனந்தபுரம்), பேராசிரியர் அ.மார்க்ஸ் (சென்னை) ஆகியோர் நடுவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

-thoothu online 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza