Sunday, December 15, 2013

ஓரினசேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்,தீர்ப்பை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்!



ஓரினசேர்க்கை எனப்படும் இயற்கைக்கு மாற்றமான உறவை தண்டனைக்குரிய குற்றமாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை டிவிட்டர்,ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் குறைகாண்பது ஆச்சர்யமாக உள்ளது. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை விட அதிகமான முயற்சிகளை,எய்ட்ஸ் நோயின் முக்கிய காரணியான இந்த அசிங்கத்திற்கு எதிராக எடுக்க வேண்டும்.     'கடவுள் ஆதம் மற்றும் ஏவாளைதான் படைத்தார். ஆதம் மற்றும் ஸ்டீவை படைக்கவில்லை' என்று ஒரு செய்தியாளர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.


ஓரினசேர்க்கை தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானது. கடவுள் நம்பிக்கையற்ற தூரதொலைவு மேற்கத்திய நாடுகளில் இந்த நோய் இருக்கலாம். ஆனால் ஒழுக்கத்தை போற்றி நல்லதொரு குடும்ப அமைப்பை கொண்ட இந்திய சமூகத்தில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மோசமான காரியத்தை இயற்கையானது என்று வாதிடுபவர்கள் இது இயற்கைக்கு மாற்றமானது என்பதை உணர வேண்டும். இல்லையென்றால் ஆண்,பெண் என்ற இரு இனங்கள் இல்லாமல் இருந்திருக்கும். மிருகங்கள்கூட இந்த மோசமான செயலில் இருந்து விலகியே இருக்கின்றன. கண்மூடித்தனமாக மேற்கில் உள்ள அனைத்தையும் பின்பற்றுவது நவீனம் அல்ல,அது அடிமைத்தனம் என்பதை இவர்கள் உணர வேண்டும்.
ஓரினசேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக்கியதை நாங்கள் ஆதரிக்கிறோம். சமூகத்தில் ஒழுக்க சீர்கேட்டை ஏற்படுத்தம் இச்செயலை சட்டபூர்வமாக்கும் எத்தகைய செயலில் இருந்தும் இந்திய அரசாங்கம் விலகி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
இப்படிக்கு,
 
ஊடக தொடர்பாளர் ,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza