Saturday, December 7, 2013

உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய பிரச்னை ஃபலஸ்தீன்! – யூசுஃப் அல் கர்ழாவி


qaradawi

தோஹா: இஸ்லாம் மற்றும் உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய பிரச்னை ஃபலஸ்தீன் என்று உலகின் புகழ் பெற்ற முஸ்லிம் மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி தெரிவித்தார்.
கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அமைந்துள்ள உமர் கத்தாப் மஸ்ஜிதில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆற்றிய ஜும்ஆ குத்பா உரையில் இதனை குறிப்பிட்டார் கர்ழாவி.

அவர் மேலும் கூறியது: உலகில் கண்களில் கண்ணீர் வடித்து தளர்ந்து நடக்கும் சமூகம் முஸ்லிம்களில் அன்றி வேறு இல்லை. முஸ்லிம்களுக்கு சொந்தமான யாகூப் நபி (அலை) அவர்களின் பெயரிலான நாட்டை இதர நாடுகளில் இருந்து நுழைந்தவர்கள் கைப்பற்றி அடக்கி ஆளுகின்றார்கள்.
1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டதற்கு நான் சாட்சியாவேன். இதற்கு எதிராக போராடிய அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவளித்தன மேற்கத்திய நாடுகள்.மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இல்லாதிருந்தால் அந்தப் போரில் அரபுக்கள் வெற்றி பெற்றிருப்பார்கள்.

இவ்வாறு கர்ழாவி கூறினார்.

Source: Thoothuonline.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza